AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியா மீதான 500% வரியை 100% ஆக குறைத்த அமெரிக்கா.. நிம்மதி பெருமூச்சு!

America Reduced Tariff On India | இந்தியா தனது எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்தியா மீதான 500% வரியை 100% ஆக குறைத்த அமெரிக்கா.. நிம்மதி பெருமூச்சு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 Jul 2026 11:36 AM IST

வாஷிங்டன், ஜூலை 15 : ரஷ்யாவிடம் (Russia) இருந்து கச்சா எண்ணெய் மற்று இயற்கை எரிவாயுக்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீதான வரியை அமெரிக்கா (America) தளர்த்தியுள்ளது. அதாவது, இந்தியா உள்ளிட்ட ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா 500 சதவீத வரியை அமலில் வைத்திருந்த நிலையில், அதனை தற்போது 100 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த முக்கிய முடிவு குறித்தும், அது இந்தியாவுக்கு எத்தகைய பலனை அளிக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா, சீனாவுக்கு நிம்மதியாக அமைந்த அமெரிக்காவின் முடிவு

இந்தியா தனது பெரும்பாலான எண்ணெய் தேவைகளை வெளிநாடுகளிடம் இருந்து பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தடுக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump), ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீதம் வரியை அறிவித்தார்.

இதையும் படிங்க : EPFO : பிஎஃப் உச்ச வரம்பு ரூ.25,000.. மத்திய அரசு எடுத்த முடிவு.. வெளியான முக்கிய தகவல்!

இந்த கடுமையான வரியின் காரணமாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையான சவால்களை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் தான், இந்த கடுமையான இறக்குமதி வரி மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் தளத்தியுள்ளது. இது இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

வரி வரம்பு 500%-ல் இருந்து வெறும் 100% ஆக குறைப்பு

முன்பு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் உலக நாடுகள் மீது சுமார் 500 சதவீதம் வரி விதிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அது அதிகபட்சம் 100 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு குறிப்பிட்ட 5 நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Gold Price : தீபாவளியின்போது ஒரு கிராம் தங்கம் ரூ.20,000-க்கு விற்பனை?.. வெளியான ஷாக் தகவல்!

எரிவாயு இறக்குமதிக்கான விலக்கு

ரஷ்யாவின் ஒட்டுமொத்த இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக வாங்கும் நாடுகளுக்கு இந்த சட்டத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us