Gold Price : தீபாவளியின்போது ஒரு கிராம் தங்கம் ரூ.20,000-க்கு விற்பனை?.. வெளியான ஷாக் தகவல்!
1 Sovereign 24 Karat Gold Will Be Selling At 20000 Rupees | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், 2026 தீபாவளி பண்டிகையின்போது தங்கம் விலை ரூ.20,000-க்கு விற்பனையாக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச்சந்தை, புவிசார் பதற்றம் உள்ளிட்ட காரணங்கள் காரணமாக தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் முழுவதும் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்தது. ஜூலையிலும் அதே நிலை நீடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தங்கம் விலை இதே நிலையில் இருக்காது என்றும், ஆண்டு இறுதியில் கடும் உயர்வை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தொடர்ந்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தீபாவளியின் போது தங்கம் விலை ரூ.20,000-க்கு விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி தங்கம் விலை குறையும் வாய்ப்பு குறைவு
சமீப காலமாக தங்கம் மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. அதாவது, தற்போதைய நிலவரப்படி 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.1.31 லட்சத்துக்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1.43 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு சவரன் 22 கேரட் தங்கம் ரூ.1,05,200-க்கும், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1,14,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : ரேஷன் கார்டு பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. நாளை மிஸ் பண்ணிடாதீங்க!




இதன் காரணமாக தங்கம் மேலும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், நிபுணர்களோ தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இல்லை என்றும், அதிகபட்சமாக 5 சதவீதம் மட்டுமே தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளனர். எனவே தங்கம் வாங்குவதை விலை குறையும் என தள்ளிப்போடாதீர்கள் என்றும் கூறுகின்றனர்.
தீபாவளிக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.20,000-க்கு விற்பனையாக வாய்ப்பு?
தங்கம் விலை தொடர்பாக நியூஸ் 18 வெளியிட்டுள்ள அறிக்கையில், புவிசார் அரசியல் பதற்றங்கள் சற்று குறைந்துள்ளதன் காரணமாக உள்நாட்டில் தங்கம் விலை, அதாவது 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1.60 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படியானால், பண்டிகை காலத்தில் அதாவது தீபாவளி பண்டிகையின் போது ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.20,000-க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.