SCSS : மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.. 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Senior Citizen Saving Scheme Investment | அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் முதலீடு செய்து எவ்வளவு லாபம் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
மனிதர்களுக்கு எப்போதுமே நிதி தேவை இருந்துக்கொண்டே இருக்கும். அதிலும் ஓய்வுக்கு பிறகு மிக அதிகமான நிதி தேவை ஏற்படும். காரணம், 60 வயதை தாண்டிய நபருக்கு வாழ்வாதாரம், மருத்துவம் என பல தேவைகள் இருக்கும். இந்த நிலையில் தான், பெரும்பாலான முதியவர்கள் தங்களது ஓய்வு காலத்தில் பிள்ளைகளை நம்பியுள்ளனர். ஆனால், அதற்கான அவசியம் இல்லை. பணியில் இருக்கும்போதே இந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வு காலத்தில் நல்ல லாபத்தை பார்க்க முடியும். அதன் மூலம் முதியவர்கள் தங்களது வாழ்வதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். அது என்ன திட்டம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS – Senior Citizen Saving Scheme). இது முதுமை காலத்தில் நிதி பாதுகாப்பை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்து, முதுமையில் அதிக லாபத்தை பெறலாம். இந்த நிலையில், 5 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட இந்த திட்டத்தில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : 20களில் முதலீடு செய்யவில்லை என்ற கவலை வேண்டாம்.. 30களில் முதலீடு செய்தும் பெரிய தொகையை உருவாக்கலாம்!




ரூ.3 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு தற்போது 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம் மொத்தமாக ரூ.1.23 லட்சம் லாபம் கிடைக்கும். அதாவது, 5 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்யும் ரூ.3 லட்சத்தில் இருந்து வட்டியாக மட்டுமே உங்களுக்கு ரூ.1.23 லட்சம் கிடைக்கும். அதன்படி, திட்டத்தின் முடிவில் உங்களுக்கு முதலீடு செய்த தொகை ரூ.3 லட்சம் மற்றும் அதற்கான வட்டி ரூ.1.23 லட்சம் ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.4.23 லட்சம் கிடைக்கும்.
இதையும் படிங்க : EPFO : பிஎஃப் உச்ச வரம்பு ரூ.25,000.. மத்திய அரசு எடுத்த முடிவு.. வெளியான முக்கிய தகவல்!
இந்த வட்டி பணத்தை முதலீட்டாளர்கள் மாதம் மாதம் வருமானமாகவும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.