விமான நிலையத்தில் ரசிகர் கொடுத்த விபூதி… ரஜினிகாந்த் செய்த கியூட் சம்பவம்!
Superstar Rajinikanth cute video viral on social media | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நிலையில் சென்னை விமான நிலையில் ரசிகரிடம் அவர் செய்த கியூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியாக நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து தர்மன் மற்றும் கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்கும் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் ஜெயிலர் 2 படம் வருகின்ற அக்டோபர் மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் படத்தின் சில காட்சிகள் படமாக்க வேண்டிய காரணத்தால் படக்குழு அதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் செல்ல விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்தின் சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விமான நிலையத்தில் ரசிகரிடம் ரஜினி செய்த கியூட் சம்பவம்:
அந்த வீடியோவில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பிற்காக கொச்சி செல்வதற்காக ரஜினிகாந்த் சென்ன விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ரஜினிகாந்திற்கு சாமி பிரசாதமான விபூதியை வழங்கினார். அந்த விபூதியை அருகில் இருந்த ரசிகர் ஒருவருக்கு வைத்துவிட்டு பிறகு அவர் நெற்றியில் வைத்துக்கொள்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை எப்போதும் மிகவும் மென்மையாக நடந்துகொள்கிறார் என்று புகழ்ந்து பேசி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Karthi: சிறை பட இயக்குநருடன் இணையும் கார்த்தி? – வைரலாகும் தகவல்!
இணையத்தில் வைரலாகும் நடிகர் ரஜினிகாந்தின் வீடியோ:
The way Superstar #Rajinikanth treats his fan..❣️😍 Thalaivar is off to Kochi for #Jailer2 Final leg of shoot..🤝 pic.twitter.com/ZrpWaYVFKT
— Laxmi Kanth (@iammoviebuff007) July 14, 2026
Also Read… Shruti Haasan: சொந்த உழைப்பில் புதிய வீட்டை வாங்கிய ஸ்ருதிஹாசன் – வைரலாகும் போட்டோஸ்!



