AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

படங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் இல்லை – நடிகர் கார்த்தி

Actor Karthi talks about message convey in movies | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் படங்களில் கருத்துகளை சொல்வது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசியுள்ளார்.

படங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் இல்லை – நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jul 2026 17:37 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்து தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் கார்த்தி. தமிழ் சினிமாவில் இயக்குநர் அமீர் எழுதி இயக்கிய பருத்திவீரன் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் கார்த்தி அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக வலம் வந்தார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது.

அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வா வாத்தியார் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் சர்தார் 2 மற்றும் மார்ஷல் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

படங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் இல்லை:

இந்த நிலையில் நடிகர் கார்த்தி முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் படங்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக மட்டும் இல்லாமல் அதில் ஒரு கருத்தை மக்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சுல்தான் படம் வெளியான போது ஒரு நடுத்தர வயது உடைய பெண் தனது கணவரும் அடிதடி தொழில் செய்து வந்தவர் என்றும் அந்த வேலைகளை விட்டுவிட்டு அவர் வேறு வேலை செய்ய நினைத்த போது அவருக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை என்றும் சுல்தான் படத்தைப் பார்த்தபிறகு விவசாயம் ஒரு தொழில் என்பதை புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை ஏன் 5 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கவில்லை என்று தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார். இதனால் படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கு இல்லை அதில் மக்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Prabhas: திருமண பேச்சில் மீண்டும் சிக்கிய பிரபாஸ்.. பொண்ணு யார் தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் கார்த்தியின் பேச்சு:

Also Read… பவிஷ் நாராயணின் லவ் ஓ லவ் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் போஸ்ட்

Follow Us