AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போர்வெல் அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி 4 ஊழியர்கள் மரணம் – அதிர்ச்சி சம்பவம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 4 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 பேரும் பணியில் இருந்தபோது மேலே சென்ற மின்சார கம்பியில் உபகரணங்கள் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போர்வெல் அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி 4 ஊழியர்கள் மரணம்  – அதிர்ச்சி சம்பவம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Jul 2026 17:06 PM IST

செங்கல்பட்டு, ஜூலை 11: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 4 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 பேரும் பணியில் இருந்தபோது மேலே சென்ற மின்சார கம்பியில் உபகரணங்கள் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 4 பேர் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

போர்வெல் அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி 4 ஊழியர்கள் மரணம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போர்வெல் அமைக்கும் பணி நடைைபெற்று வந்திருக்கிறது. பணியின் போது மேலே சென்ற மின்சார கம்பியில் அவர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் உரசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போர்வெல் குழாயை பொருத்தியபோது தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியதில் பிரபு , பாட்ஷா , ராஜேந்திரன், பாலாஜி ஆகியோர் உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டும் மிஸ்டர் மெகா க்ளீன் – செந்தில் பாலாஜியை விலாசிய த.வெ.க ஐடி விங்..

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போர்வெல் அமைக்கும் பணியின்போது உரிய முறையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்றதா? போர்வெல் அமைக்கும் பணிக்கு முறையான அனுமதி பெறப்பட்டிருந்தததாக என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்கும் விடுதி உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

போர்வெல் அமைக்கும் பணியின் போது போர்வெல் மோட்டார் பொருத்துவதில் நிபுணர் ஆலோசனை அவசியம் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. பல இடங்களில் சுமார் 750 அடிகளுக்கும் மேலான ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டியதாக இருக்கிறது. போர்வெல் அமைந்துள்ள பகுதியின் பாறையை பொறுத்து சோடியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள் நீரில் கலந்திருக்கின்றன. அவற்றின் அளவு 300 முதல் 600 பிபிஎம் என்பதற்கும் அதிகமாக இருந்தால் தக்க முறையில் சுத்திகரிப்பு செய்தே கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். என அறிவுறுத்தியிருந்தது.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு.. DSP கையை கடித்த தவெக தொண்டர்..

நிபுணர் ஆலோசனை பெற்று, சரியான மோட்டாரை தேவையான ஆழத்தில் பொருத்தி நீரை எடுப்பதால் கால விரயம் மற்றும் மின் பயன்பாடு ஆகியவற்றில் சிக்கனம் ஏற்படும் என்றும் வீடுகளுக்கான போர்வெல் மோட்டார்கள் ஒவ்வொரு குதிரைத் திறனிலும் ஏராளமான மாடல்கள் உள்ளதால் தகுந்த ஆலோ சனை பெற்று அமைப்பது தான் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us