AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டும் மிஸ்டர் மெகா க்ளீன் – செந்தில் பாலாஜியை விலாசிய த.வெ.க ஐடி விங்..

'யாரை முதலமைச்சர் ஆக்கலாம் என்று பார்த்தபோது, அந்தப் பட்டியலில் இவரும் இருந்தார். இவரு கெட்ட கேடு...' என்று ஸ்டாலினால் புகழப்பட்டவர்தான் இன்று எங்கள் வெற்றித் தலைவரைப் பார்த்து கேள்வி கேட்க வந்திருக்கிறார். அதைக்கூட பொதுவெளியில் வந்து கேட்கவில்லை; ஒளிந்தபடியே கேட்டிருக்கிறார் என தவெக ஐடி விங் விமர்சித்து உள்ளது.

தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டும் மிஸ்டர் மெகா க்ளீன் – செந்தில் பாலாஜியை விலாசிய த.வெ.க ஐடி விங்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Jul 2026 10:54 AM IST

ஜூலை 11, 2026: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக வெற்றிக் கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவு கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நேற்றைய தினம் கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, செந்தில் பாலாஜியை மறைமுகமாக விமர்சித்து, “கரூர் கம்பெனி முதலாளி” என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், செந்தில் பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கரூர் சம்பவம் நடைபெற்றபோது தலைதெறிக்க தனி விமானத்தில் ஓடியது யார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மிஸ்டர் ‘மெகா க்ளீன் – செந்தில் பாலாஜியை விமர்சித்த டி.வி.கே ஐ.டி. விங்:

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவு செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவில், “கரூர் கம்பெனி முதலாளியும், தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டுபவருமான மிஸ்டர் ‘மெகா க்ளீன்(?)’, ஒரு ட்வீட் போட்டு உருட்டியிருக்கிறார். அதில் தானும் உருண்டு புரண்டு, ‘அய்யோ அம்மா… நெஞ்சு வலி’ என்று கார் கதவை உதைத்துக்கொண்டே கதறியது போலக் கதறியிருக்கிறார்.

‘யாரை முதலமைச்சர் ஆக்கலாம் என்று பார்த்தபோது, அந்தப் பட்டியலில் இவரும் இருந்தார். இவரு கெட்ட கேடு…’ என்று ஸ்டாலினால் புகழப்பட்டவர்தான் இன்று எங்கள் வெற்றித் தலைவரைப் பார்த்து கேள்வி கேட்க வந்திருக்கிறார். அதைக்கூட பொதுவெளியில் வந்து கேட்கவில்லை; ஒளிந்தபடியே கேட்டிருக்கிறார்.

அரசியல் வியாபார ‘வெண்டிங் மெஷின்’ ஆக திமுகவால் ‘பர்சேஸ்’ செய்யப்பட்டு, பின்னர் அறிவாலய ‘வாஷிங் மெஷினில்’ போட்டு வெளுத்தெடுக்கப்பட்டவர், டாஸ்மாக் ஊழல் ‘டான்’ இன்று நேர்மையாளர் போல பேசுவது, நரி நடனமாடுவது போல நகைச்சுவையாக இருக்கிறது.

உண்மையும் நேர்மையும் இருந்தால், ஓடி ஒளியாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே? அந்தத் திராணி இல்லாமல் தெறித்து ஓடிய நீங்கள் எல்லாம் பேசுகிறீர்களா?

நாடே சிரிக்கிறது. இந்த நரித்தந்திர நாயகரின் உத்தமர் வேடம் இனியும் எடுபடாது, மிஸ்டர் மெகா க்ளீன்(?)” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us