நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸின் 30வது திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ராகவேந்திரா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 12, 2026 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தை ராகவா லாரன்ஸ் மற்றும் புகழ் இணைந்து இயக்குகின்றனர். சமீப காலமாக தனது இசையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.