Dhanush: தனுஷின் தமிழ் முருகன் பட கதை இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்!
Thamizh Murugan Movie Story: கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ். வெற்றிமாறனின் கூட்டணியில், இவர் 5வது இணைந்திருக்கும் படம்தான் தமிழ் முருகன். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், இதன் கதை எதை மையமாக கொண்டு உருவாகிறது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமான பல படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் சினிமா கெரியரிலே அதிக பொருட்செலவில் தயாராகவுள்ள படம்தான் தமிழ் முருகன் (Thamizh Murugan). இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் (Vetri maaran) இயக்க, தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வெற்றிமாறன் மற்றும் தனுஷ் 5வது முறை இணைந்துள்ள இப்படத்திற்கு, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைக்கவுள்ளார். தமிழ் முருகன் பட அறிவிப்பு வீடியோவில், சாய் அபயங்கரின் இசையில் “வருகிறான் முருகன் வருகிறான்” என்ற தீம் பாடலானது எதிர்பாராத வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படமானது உண்மையான சம்பவத்தய் மையமாக கொண்டு இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அண்மையில், இதன் டைட்டில் டீசர் வெளியாகியிருந்த நிலையில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த விதத்தில் இப்படமானது ஒரு நாவலை மையமாக கொண்டு இயக்கப்படுவதாக கூறப்படும் நிலையி, அது குறித்து விவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: போடுங்கடா பட்டாச..! ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியை உறுதி செய்த விநியோகஸ்தர நிறுவனம்!
தமிழ் முருகன் படத்தின் கதை என்ன தெரியுமா:
தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம்தான் தமிழ் முருகன். இப்படமானது பிரபல எழுத்தாளர் அறிவுமதி எழுதிய தமிழ் முருகன் என்ற நாவலை மையமாக கொண்டு இயக்கப்படுகிறதாம். இந்த படமானது போர்க் கடவுளான முருகப்பெருமானை மையமாக கொண்டது.
இப்படம் தமிழ் கலாச்சாரம் மற்றும் புராணக்கதைகளை கொண்டு ஒரு சக்திவாய்ந்த படமாக உருவாக்கவுள்ளதாம். இப்படம் தனுஷ் இதுவரை நடித்த படங்களை விடவும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக உருவாகும் என வட்டாரங்கள் கூறுகிறது.
தமிழ் முருகன் பட டைட்டில் டீசர் குறித்து நடிகர் தனுஷ் பகிர்ந்த எக்ஸ் பதிவு:
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN https://t.co/3wjGHGfAjG— Dhanush (@dhanushkraja) July 10, 2026
இந்த படத்தின் அறிவிப்பானது வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தது. அண்மையில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் காட் ஆப் வார் என்ற படம் உருவாக்குவதாக அறிவிக்கிக்கப்பட்டது. இதுவும் தமிழ் கடவுளான முருகனின் கதையை மையமாக கொண்டு இயக்கப்படுகிறதாம்.
இதையும் படிங்க: ஜூனியர் என்டிஆர் படத்துக்கு பதிலடி? – உருவாகிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் தமிழ் முருகன்!
மேலும் தமிழில் சேயோன் என்ற படமும் முருகனை மையமாக கொண்டு இயக்கப்படும் நிலையில், தற்போது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி படமும் முருகப்பெருமானை மையமாக கொண்டு இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறனின் இயக்கத்தில் பக்தி படமானது உருவாவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.