AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பவிஷ் நாராயணின் லவ் ஓ லவ் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் போஸ்ட்

Pavish Narayanans film Love Oh Love synopsis | தமிழ் சினிமாவில் நடிகர் பவிஷ் நாராயணன் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் லவ் ஓ லவ். இந்தப் படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பவிஷ் நாராயணின் லவ் ஓ லவ் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் போஸ்ட்
லவ் ஓ லவ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jul 2026 18:21 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகர்கள் பலர் அடுத்தடுத்து நாயகன்களாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் மூன்றாவது தலைமுறையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார் இளம் நடிகர் பவிஷ் நாராயண். இவர் நாயகனாக கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை அவரது தாய் மாமனான நடிகர் தனுஷ் எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பவிஷ் நாராயணன் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் உருவான படம் லவ் ஓ லவ். இந்தப் படம் இன்று 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தினை இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் பவிஷ் நாராயணுக்கு ஜோடியால நடிகை நாக துர்கா நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் படத்தின் கதை என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பவிஷ் நாராயணின் லவ் ஓ லவ் படத்தின் கதை இதுதானா?

தனது காதலி அவந்திகாவின் ஆடம்பரமான செலவுப் பழக்கங்களால் வேலையை இழந்து, கடும் கடன் சுமையில் சிக்கி, குடும்பத்தாலும் கைவிடப்பட்டு ரகுவரனின் (Pavish Narayan) வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. பொறுமை இழந்த ரகுவரன், அவந்திகாவிடம் ‘L3’ (காதலை முறிப்பதற்கான கடிதம்) கேட்கிறான். ஆனால் அவந்திகா அதை மறுத்து, உறவைத் தொடரவே விரும்புகிறாள். தற்கால உறவுச் சூழலில் ஒரு ஆண் எதிர்கொள்ளும் வலிகளையும் சிரமங்களையும் அவந்திகா புரிந்துகொள்ளும் வகையில், நான்கு மாதங்களுக்கு உறவில் ஒரு ‘ஆணின்’ பங்கை ஏற்றுச் செயல்படுமாறு ரகுவரன் அவளுக்குச் சவால் விடுகிறான். அந்தச் சவாலில் அவந்திகா வெற்றி பெற்றாளா அல்லது இருவரும் காதலின் மதிப்பை உணர்ந்துகொண்டார்களா என்பதே இக்கதையின் கருவாகும். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது த்ரிஷ்யம் 3 – மோகன்லால் நெகிழ்ச்சிப் பதிவு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Jana Nayagan: முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு கிடைத்தது சென்சார் – குஷியில் ரசிகர்கள்!

Follow Us