AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இதயம் முரளி – லவ் ஓ லவ் வரை… நாளை தமிழ் சினிமாவில் எந்த படத்தை முதலில் பார்ப்பீங்க

This Week Theatre Release Movies List Here | தமிழ் சினிமாவில் வாரம் வாரம் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில் நாளை ஜூலை மாதம் 10-ம் தேதி தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இதயம் முரளி – லவ் ஓ லவ் வரை… நாளை தமிழ் சினிமாவில் எந்த படத்தை முதலில் பார்ப்பீங்க
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jul 2026 18:54 PM IST

இதயம் முரளி படம்: தமிழ் சினிமாவில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் எழுதி இயக்கிய படம் இதயம் முரளி. தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்த இவர் இந்த இதயம் முரளி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் பல பிரபல நடிகர்கள் இந்தப் படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து உள்ள நிலையில் ஃபகத் பாசிலும் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ரொமாண்டிக் காமெடி ட்ராமா பாணியில்  உருவாகி உள்ள நிலையில் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் படம் நாளை 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படம்: க்ரைம் த்ரில்லர் பாணியில் தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி உள்ள படம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. இயக்குநர் தயால் பத்மநாபன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் வெற்றி நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரங்கராஜ் பாண்டே, பிரிஜிடா, சாகா, மாறன், சரவணன், லிசி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி மற்றும் சுப்ரமணியம் சிவா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Atharvaa: எனக்கு அவர் எப்போதும் அண்ணாதான்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்த அதர்வா!

லவ் ஓ லவ் படம்: தமிழ் சினிமாவில் நடிகர் பவிஷ் நாராயண் நடிப்பில் இரண்டாவதாக உருவாகி உள்ள படம் லவ் ஓ லவ். ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் பவிஷ் நாராயன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் நாளை 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா… 16 ஆண்டுகளைக் கடந்தது மதராசப்பட்டினம் படம்!

Follow Us