AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகர் தனுஷின் ஓம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – வைரலாகும் பதிவு

Actor Naseeruddin Shah on board the OM movie | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ள நடிகர் தனுஷ் தற்போது ஓம் படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தில் பிரபல மூத்த நடிகர் நசீருதீன் ஷா இணைந்து உள்ளார்.

நடிகர் தனுஷின் ஓம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – வைரலாகும் பதிவு
நடிகர் நசீருதீன் ஷாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jul 2026 14:28 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. தமிழ் சினிமாவில் ரங்கூன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது இயக்கத்தில் முதலாவதாக வெளியான படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கினார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் சினிமாவில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் அமரன். இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மறைந்த ராணுவ வீரர் முகுந்தின் பயோகிராஃபியாக இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக யாருடைய படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நடிகர் தனுஷ் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். அதன்படி தற்போது தனுஷின் 55-வது படத்தை எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ஓம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் தனுஷின் ஓம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் நசீருதீன் ஷா:

நடிகர் தனுஷ் உடன் இந்தப் படத்தில் நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகர் நசீருதீன் ஷா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இவர் இந்தி மொழியில் அதிகப் படங்களில் நடித்து இருந்தாலும் தொடர்ந்து இந்திய மொழிகளில் பலப் படங்களிலும் அவ்வபோது ஆங்கில மொழியிலும் நடித்து வந்தார். கடந்த 1975-ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் நசீருதீன் ஷா தற்போது வரை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… D x V என்பதன் அர்த்தம் இதுதானா? வைரலாகும் தனுஷின் எக்ஸ் தள பதிவு

ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வெய்டிங் ஓவர்… டிக்கெட் முன்பதிவை தொடங்கியது இதயம் முரளி படக்குழு

Follow Us