AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெய்டிங் ஓவர்… டிக்கெட் முன்பதிவை தொடங்கியது இதயம் முரளி படக்குழு

Idhayam Murali Movie Ticket Booking Open Now | தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் தற்போது வெளியாக உள்ள படம் இதயம் முரளி. இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் தற்போது ஓபனாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெய்டிங் ஓவர்… டிக்கெட் முன்பதிவை தொடங்கியது இதயம் முரளி படக்குழு
இதயம் முரளிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jul 2026 20:03 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் வாரம் வாரம் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரமும் பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது இதயம் முரளி படம். இந்தப் படத்தை இயக்குநர் ஆகாஷ் முரளி எழுதி இயக்கி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் இதயம் முரளி படத்தின் மூலமாக ஆகாஷ் பாஸ்கரன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

அதில் குறிப்பாக இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர். அதன்படி நடிகைகள் கயாடு லோஹர் மற்றும் பிரீத்தி முகுந்தன் உடன் இணைந்து நடிகர்கள் ஃபஹத் பாசில், நட்டி சுப்ரமணியம், நிஹாரிகா, தமன் எஸ், டிராவிட், ரக்ஷன், ஏஞ்சலின், அஞ்சு குரியன், சுதாகர், ஜோனிதா மற்றும் யஷாஸ்ரீ என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

டிக்கெட் முன்பதிவை தொடங்கியது இதயம் முரளி படக்குழு:

இந்தப் படம் வருகின்ற 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தற்போது ஓபன் செய்துள்ளது. அது குறித்து அதிகாரப்பூர்வ பதிவை வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படம் தொடர்பான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை இதுதான் – தயாரிப்பாளர் ஓபன் டாக்

இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அந்த இரண்டு விசயமும் சிவகார்த்திகேயனிடம் கற்றுக்கொண்டேன் – இயக்குநர் சிவக்குமார் முருகேசன்

Follow Us