AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை இதுதான் – தயாரிப்பாளர் ஓபன் டாக்

Viswanath and Sons movie story update | நடிகர் சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் கதை என்ன என்பது குறித்து தயாரிப்பாளர் சமீபத்திய பேட்டியில் பேசியது வைரலாகி வருகின்றது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை இதுதான் – தயாரிப்பாளர் ஓபன் டாக்
விஸ்வநாத் & சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jul 2026 11:20 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இது சூர்யாவின் நடிப்பில் உருவான 46-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது.

அதன்படி படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளார். படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் கதை இதுதான்:

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் நாக் வம்சி தொடர்ந்து பேட்டியில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டியில் அவர் படத்தின் கதை குறித்து பேசியுள்ளார். அதில், 40 வயதுடைய திருமணம் ஆகாத ஒருவருக்கும், 20 வயதுடைய ஒரு பெண்ணுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட, குடும்பங்கள் ரசிக்கக்கூடிய ஒரு வணிகரீதியான திரைப்படம் தான் இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்.. இதில் கதாநாயகனின் தோற்றம் ‘கஜினி’ படத்தில் சூர்யா தோன்றிய விதத்தை நினைவூட்டும் வகையில் ஸ்டைலாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தர்மன் படத்தின் முதல் ஷாட் இதுதான் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா – தனுஷ் ரசிகர்களுக்கு அவர்களின் பிறந்த நாளில் காத்திருக்கும் ட்ரீட்… வைரலாகும் தகவல்

Follow Us