AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படம் நிச்சயமாக அதை செய்யும் – வைரலாகும் தயாரிப்பாளர் பேச்சு

Vishwanath and Sons movie producer speech viral on social media | நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் & சன்ஸ். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படம் நிச்சயமாக அதை செய்யும் – வைரலாகும் தயாரிப்பாளர் பேச்சு
விஸ்வநாத் & சன்ஸ் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jul 2026 11:07 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் நடிகர் சூர்யாவிற்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் இந்த கருப்பு படம் நடிகர் சூர்யாவின் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் சமீபத்திய பேட்டியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

200 சதவீதம் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் மீது நம்பிக்கை உள்ளது:

இந்த நிலையில் சமீபத்தில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் தயாரிப்பாளர் நாக் வம்சியிடம் கருப்பு படத்தின் வெற்றி உங்கள் படத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் நாக் வம்சி நான் சமீபத்தில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தினை முழுவதுமாக பார்த்தேன். இது 200 சதவீதம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை நிச்சயம் ரசிப்பார்கள்; இது உறுதி. இது ஒரு முழுமையான குடும்பத் திரைப்படம். இப்படம் மிகப்பரிய அளவில் வெளியாகவுள்ளது என்று அவர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் தயாரிப்பாளர் நாக் வம்சி பேச்சு:

Also Read… அரசன் இதுவரை இல்லாத பெரிய வசூல் சாதனை படைக்கும் – தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு

Follow Us