AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

RJ Balaji: அஜித்துடன் படத்தில் இணைவீர்களா? நச் பதிலை கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

RJ Balaji About Ajith: தமிழில் இயக்குநராகவும், நடிகராகவும் மிகவும் பிரபலமானவர் ஆர்.ஜே.பாலாஜி. சூர்யாவின் நடிப்பில் கருப்பு படத்தை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருந்தார். மேலும் தற்போது புதிய படத்திற்கான பணியிலும் இருக்கிறார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், அஜித்துடன் படத்தில் இணைவது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

RJ Balaji: அஜித்துடன் படத்தில் இணைவீர்களா? நச் பதிலை கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!
அஜித் பற்றி ஆர்ஜே பாலாஜிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 02 Jul 2026 17:58 PM IST

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்து பின் துணை வேடம், நடிகர் மற்றும் இயக்குநர் என அடுத்தடுத்தகட்டத்திற்கு படி படியாக வளர்ந்தவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji). இவரின் இயக்கத்தில் இதுவரை கிட்டத்தட்ட 4 படங்கள் வெளியாகியுள்ளது. எல்.கே.ஜி (LKG) படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவந்தார். மேலும் இறுதியாக இவர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் வெளியான கருப்பு (Karuppu) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2026ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது சிறப்பான வசூலைபெற்று வெற்றிபெற்றிருந்தது. இதில் சூர்யா கருப்பசாமியாக நடித்து ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதன் மூலம் ஆர்.ஜே.பாலாஜிக்கு மேலும் மவுசு அதிகமாகியுள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இவர் கலந்துகொண்ட நிலையில், அதில் அஜித்துடன் படத்தில் இணைந்தால் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: படமே ரிலீஸாகல.. ஆனால் இயக்குநருக்கு விலையுயர்ந்த பரிசை கொடுத்த விஷ்ணு விஷால்!

அஜித் குமாருடன் படத்தில் இணைவது பற்றிய தனது கருத்த சொன்ன ஆர்.ஜே.பாலாஜி:

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் அவரிடம் “நீங்கள் எப்போது உங்கள் இயக்கத்தில் அஜித் சாரை வைத்து படம் எடுக்கப்போகிறீர்கள்? என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த, ஆர்.ஜே.பாலாஜி, “அதை பற்றி என்னால் எந்த பிளானும் சொல்ல முடியாது. குறிப்பாக அஜித் குமார் சாருக்காக ஒரு படத்தின் கதை எழுதினாலும், அவருக்காக நான் மிக சிறப்பாக எழுதியிருந்தாலும், அது நடக்குமா அல்லது நடக்காதா? எனக்கு தெரியாது.

இதையும் படிங்க: கட்டா குஸ்தி 2 முதல் டார்க் வரை… தமிழ் சினிமாவில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

நான் என் எழுத்து பணியையும், வேலையையும் செய்வேன். அது அஜித் குமாருக்கு பிடித்து, அவருடன் படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்தால் நான் மகிழ்ச்சியடைவேன்” என அதில் அவர் கூறியுள்ளார்.

அஜித் குமாருடன் படத்தில் இணைவது பற்றிய தனது கருத்தை ஆர்.ஜே.பாலாஜி சொன்னது தொடர்பான பதிவு:

தற்போது ஆர்.ஜே.பாலாஜி புதிய படத்திற்காக கதை எழுதும் பணியில் இருக்கிறாராம். மேலும் அவர் நடிகராகவும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் இணையும் புது ஹீரோ மற்றும் இயக்குநர் யார் என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us