பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியும்.. இன்னும் குறும்புக்காரர்களாகவே இருக்கிறோம் – விஷாலுடனான நட்பு குறித்து அஞ்சலி நெகிழ்ச்சி பதிவு!
Anjali Posts About Vishal Friendship: தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக இருப்பவர் அஞ்சலி. இவர் தமிழில் மகுடம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தனக்கும், விஷாலுக்கும் இடையே உள்ள நட்பு குறித்து நெகிழ்ச்சியான பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை அஞ்சலி (Anjali) தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இவர் இறுதியாக இயக்குநர் சங்கர் இயக்கத்தில், ராம் சரண் (Ram Charan) ரெட்டை வேடத்தில் நடித்திருந்த கேம் சேஞ்சர் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவர் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், ஓரளவு வரவேற்கப்பட்டிருந்தது. இப்படத்தை அடுத்து இவரின் நடிப்பில் தமிழில் “ஏழு கடல் ஏழு மலை” (Yezhu Kadal Yezhu Malai) என்ற படமானது உருவாகி இன்னும் வெளியாகாமல் உள்ளது. இப்படத்திற்கு பின் இவர் நடித்திருக்கும் புது படம்தான் மகுடம் (Magudam). இதை விஷால் (Vishal) எழுதி, இயக்கி நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மகுடம் படத்தில் விஷால் கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு வேடத்திற்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். அந்த வகையில் அண்மையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்ட அஞ்சலி, அதில் விஷாலின் நட்பு குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி.. ட்ரெயின் படத்தின் டீசர் அப்டேட் இதோ!
விஷாலுடன் தனது 10 வருட நட்பு குறித்து நெகிழ்ச்சியாக அஞ்சலி சொன்ன விஷயம்:
அந்த பதிவில் அஞ்சலி, “காலம் பறந்து செல்கிறது, ஆண்டுகள் கடந்து செல்கின்றன. ஆனால் சில நினைவுகளும், சில சிறப்பான நபர்களை காலத்தால் அழியாதவர்களாக இருக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியும், நாங்கள் (விஷால்) உள்ளுக்குள் அதே குறும்புக்காரர்களாகவே இருக்கிறோம். எதனாலும் மாற்ற முடியாத இந்த நட்புக்கு வாழ்த்துக்கள், என்றும் அன்புடன் தொடரும்” என அதில் அவர் தனது 10 வருட நட்பு குறித்து நெகிழ்ச்சியாக தவெறிவித்திருக்கிறார். இந்த பதிவில் விஷாலுடன் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அஞ்சலி பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: எது தர்மம்? திருச்சியில் தவெக சார்பில் போட்டியா? விளக்கமளித்த நடிகர் லாரன்ஸ்!
விஷாலின் நட்பு குறித்து அஞ்சலி வெளியிட்ட நெகிழ்ச்சி எக்ஸ் பதிவு:
Time flies. Years pass. But some memories and some special people remain timeless.
More than a decade later, we’re still the same pranksters at heart. Here’s to a friendship that nothing can ever change.
Loads of love. ❤️@VishalKOfficial #Magudam #Makutam pic.twitter.com/GACXewMftm— Anjali (@yoursanjali) June 30, 2026
விஷால் மற்றும் அஞ்சலி இணைந்து நடித்துள்ள புது படம் மகுடம். இதை விஷால், இயக்கி நடிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இவரின் இசையில் ரைஸ் ஆப் லிங்கா மற்றும் நச்சிந்தி மச்சானே என இரு பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படமானது வரும் 2026 ஜூலை மாதத்தில் வெளியாக தயாராகியுள்ள நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் மார்க் ஆண்டனி படம் போலவே ஒரு அதிரடி ஆக்ஷன் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.



