Anjali: அஞ்சலியின் பிறந்தநாள்.. மகுடம் படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!
Anjali Birthday: நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகியுள்ள புதிய திரைப்படம்தான் மகுடம். இதில் விஷால் நாயகனாக நடித்துள்ள நிலையில், அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இன்று (16/06/2026) நடிகை அஞ்சலி தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், ஸ்பெஷல் ;போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய மக்கள் மத்தியில் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்துவருபவர் விஷால் (Vishal). இவர் தொடர்ந்து தமிழ் மொழியில் படங்களில் நடித்து அசத்திவருகிறார். இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தற்போது இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். அந்த திரைப்படம்தான் மகுடம் (Magudam). இப்படத்தின் விஷால் 3 வேடங்களில் நடித்து, பின் இயக்குநராக இயக்கியும் உள்ளார். இதை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துவருகிறது. இதில் நடிகர்கள் அஞ்சலி (Anjali), துஷாரா விஜயன் (Dushara Vijayan) மற்றும் யோகி பாபு போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு தென்னிந்திய பிரபலம் மற்றும் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash kumar) இசையமைத்துவருகிறார்.
இந்நிலையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 16ம் தேதியில், நடிகை அஞ்சலி (Anjali Birthday) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவர் இன்னும் திருமணமே செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகுடம் படத்திலிருந்து, இவரின் பிறந்தநாளை சிறப்பாக ஸ்பெஷல் போஸ்டரை விஷால் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: தனுஷ் குரலில் அதர்வாவின் இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது வாமா வாமா பாடல்!
அஞ்சலியின் பிறந்தநாளை முன்னிட்டு மகுடம் படத்திலிருந்து குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Team Magudam/Makutam wishes @yoursanjali a wonderful birthday#HBDAnjali #Magudam #Makutam @VishalKOfficial @gvprakash @officialdushara @SuperGoodFilms_ pic.twitter.com/KMkfMxGSEf
— Magudam Official (@MagudamOfficial) June 16, 2026
விஷாலின் மகுடம் திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஒத்திவைப்பு: :
இந்த மகுடம் படத்தை ஆரம்பத்தில் இயக்குநர் ரவி அரசு இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில காரணககால் இப்படத்தை இயக்குவதிலிருந்து அவர் விலகிவிட்டார். பின் இப்படத்தை முழுவதுமாக விஷால் இயங்கிவந்த நிலையில், அவருக்கு உதவியாக ரவி அரசும் பணியாற்றியுள்ளார். இதற்க்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துவரும் நிலையில், ரைஸ் ஆப் லிங்கா என்ற பாடல் இன்று வெளியாக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இப்பாடலின் ரிலீஸ் தேதியை, வரும் 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதிக்கு படக்குழு ஒத்திவைத்துள்ளது.
பாடலின் ரிலீஸை ஒத்திவைத்து குறித்து வெளியான அறிவிப்பு பதிவு:
Dear friends,
The first single from Magudam/Makutam was scheduled to be released today, but sometimes a song asks for a little more love before it meets the world and hence our First Single is postponed and now will be out on 19th June. pic.twitter.com/HQxda2qiom
— Magudam Official (@MagudamOfficial) June 16, 2026
இதையும் படிங்க: பாக்கெட் நாவல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்!
மகுடம் பட ரிலீஸ் எப்போது:
இதில் விஷால் கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்திருக்கும் நிலையில், அதிரடி கேங்ஸ்டர் கதைக்களத்தில் இது தயாராகியுள்ளது. இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்திற்கு எட்டிய நிலையில், சமீபத்தில் டீசர் வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது முதல் பாடல் வெளியாகியிருக்கும் நிலையில், படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகவுள்ளது. அதன்படி இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்னும் ரிலீஸ் தேதி உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.