AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த நேரத்தில் சினிமாவில் இருந்தே விலகிடலாம்னு நினச்சேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்

Actress Nivetha Pethuraj Recent Interview | தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சினிமாவில் இருந்து விலகுவது குறித்து யோசித்ததாக பேசியது வைரலாகி வருகின்றது.

அந்த நேரத்தில் சினிமாவில் இருந்தே விலகிடலாம்னு நினச்சேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jun 2026 13:06 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஒரு நாள் கூத்து. இந்தப் படத்தில் நடிகர் தினேஷின் காதலியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகர் நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் தினேஷ் மற்றும் நிவேதா பெத்துராஜின் ஜோடி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தார் நடிகை நிவேதா பெத்துராஜ். அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, ரவி மோகன், விஜய் சேதுபதி, பிரபு தேவா ஆகியோருடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சினிமாவில் இருந்து விலகுவது குறித்து யோசித்ததை வெளிப்படையாக பேசியுள்ளார்.

அந்த நேரத்தில் சினிமாவில் இருந்தே விலகிடலாம்னு நினச்சேன்:

அதன்படி நிவேதா பெத்துராஜ் பேசியதாவது, 2023-இல் நான் சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்திருந்தேன். ஆனால், சிங்கீதம் சீனிவாச ராவின் அந்தப் பிரம்மாண்டமான வெற்றிப் படத்தில் நான் இணைவதற்காகவே, வாழ்க்கை என்னை பல தவறான முடிவுகள் மற்றும் பாதைகள் வழியாக அழைத்துச் சென்றிருக்கிறது என்பதை உணர்ந்தேன். என்னை மீண்டும் திரையுலகிற்குக் கொண்டு வந்ததற்காக நாக் அஸ்வினுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் இல்லையென்றால் நான் இன்று இங்கே இருந்திருக்க மாட்டேன். ஒருவேளை இமயமலையில் எங்காவது அமர்ந்து தியானம் செய்துகொண்டோ அல்லது வேறு ஏதோ ஒரு நிலையிலோ இருந்திருப்பேன். நான் ஒரு மாறுபட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க விரும்பினேன், ஆனால் இப்போது மீண்டும் இதில் களமிறங்கியுள்ளேன்; இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… Allu Arjun: அல்லு அர்ஜுன் – அட்லீயின் ராக்கா பட ரிலீஸ் எப்போது இருக்கும்? – வைரலாகும் தகவல்!

இணையத்தில் வைரலாகும் நிவேதா பெத்துராஜ் பேச்சு:

Also Read… 19 ஆண்டுகளை நிறைவு செய்தது ரஜினிகாந்தின் சிவாஜி படம்!

Follow Us