AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

19 ஆண்டுகளை நிறைவு செய்தது ரஜினிகாந்தின் சிவாஜி படம்!

19 Years Of Sivaji The Boss Movie | நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சிவாஜி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

19 ஆண்டுகளை நிறைவு செய்தது ரஜினிகாந்தின் சிவாஜி படம்!
சிவாஜிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jun 2026 17:12 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சிவாஜி தி பாஸ். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்தப் படத்தினை இயக்குநர் சங்கர் எழுதி இயக்கி இருந்தார். ரொமாண்டிக் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிகை ஷ்ரேயா சரண் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விவேக், சுமன், மணிவண்ணன், வடிவுக்கரசி, வி.எம்.சி.ஹனீபா, ரவிக்குமார், சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, சண்முகராஜன், லிவிங்ஸ்டன், பிரமிட் நடராஜன், எம்.எஸ்.பாஸ்கர், உமா பத்மநாபன், வாசு விக்ரம், போஸ் வெங்கட், மகாதேவன், ரகுவரன், நயன்தாரா, இளவரசு, சின்னி ஜெயந்த், மயில்சாமி, தாமு, கனல் கண்ணன், முத்துகாளை, ஹல்வா வாசு, சுவாமிநாதன், கராத்தே ராஜா, செல்லதுரை என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை ஏவிம் புரடெக்‌ஷன்ஸ் தயாரித்து இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

19 வருடங்களைக் கடந்தது சிவாஜி படம்:

வெளிநாட்டில் வேலை செய்து வரும் நடிகர் ரஜினிகாந்த் நன்றாக சம்பாதித்து பெரிய பணக்காரராக ஆன போது மீண்டும் தமிழ் நாட்டிற்கு வந்து தனது சொந்த மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கையில் அங்கு உள்ள அரசியல்வாதியால் பாதிக்கப்படுகிறார். அதனைத் தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்ததைப் படக்குழு கொண்டாடி வருகின்றது.

Also Read… அஜய் ஞானமுத்துவுடன் புது படத்தில் கைகோர்க்கும் ராகவா லாரன்ஸ்?

சிவாஜி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 18 ஆண்டுகளை நிறைவு செய்தது தசாவதாரம் படம் – கொண்டாடும் ரசிகர்கள்

Follow Us