AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாங்க நாலு பேரு பாடல் வீடியோவை ரிலீஸ் செய்த கருப்பு படக்குழு

Naanga Naalu Peru Video Song Out Now | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் கருப்பு படத்தில் இருந்து இன்று நாங்க நாலு பேரு பாடல் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நாங்க நாலு பேரு பாடல் வீடியோவை ரிலீஸ் செய்த கருப்பு படக்குழு
நாங்க நாலு பேரு பாடல் வீடியோImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2026 20:27 PM IST

தமிழ் சினிமாவில் இந்த சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் அதிகரித்த பிறகு தொடர்ந்து படங்கள் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படத்தின் பாடல்களும் ஒவ்வொரு சிங்கிளாக வெளியாகி தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும். படம் வெளியாவதற்கு முன்னதாக லிரிக்கள் வீடியோவாக வெளியாகும் படம் வெளியான பிறகு வீடியோ பாடலாக வெளியாகும். இப்படி இருக்கும் சூழலில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட படம் கருப்பு. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று தொடர்ந்து ரசிகர்கள் காத்திருந்த போது அவ்வபோது படம் தொடர்பான அப்டேட்களை வெளியிட்டு படக்குழு சாமாதானம் செய்து வந்தது. இப்படி இருக்கும் சூழலில் ஒரு கட்டத்தில் படத்தை ரிலீஸ் செய்யாமல் வெறும் அப்டேட் மட்டுமே கொடுக்குறீர்கள் என்று படக்குழுவினர் மீது நேரடியாக கடிந்துக் கொண்டனர்.

அந்த சூழலில் கருப்பு படத்தில் இருந்து நாங்க நாலு பேரு என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டது. ஆனால் அந்த பாடல் வெளியான போது ரசிகர்கள் மிகவும் அதிக அளவில் ட்ரோல் செய்தனர். இதன் காரணமாகவே அந்தப் பாடலை கருப்பு படத்தில் பயன்படுத்தவில்லை. இப்படி இருக்கும் நிலையில் தற்போது அந்தப் பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நாங்க நாலு பேரு பாடல் வீடியோவை ரிலீஸ் செய்த கருப்பு படக்குழு:

அதன்படி நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள இந்த கருப்பு படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தில் இடம் பெறாத நாங்க நாலு பேரு என்ற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Also Read… இன்று திரையரங்குகளில் வெளியான ஹபீபி படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து இதோ

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… லீ மான்ஸில் குடும்பத்தினருடன் நடிகர் அஜித் – வைரலாகும் போட்டோஸ்

Follow Us