AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த ஆட்டம் நிக்காது… வசூலில் வியக்க வைக்கும் கருப்பு படம் – கொண்டாட்டத்தில் படக்குழு

Karuppu Movie Box Office Collection | தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் வெளியாகி அதிக வசூலைப் பெற்றப் படமாக உள்ளது கருப்பு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது உலகம் முழுவது எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆட்டம் நிக்காது… வசூலில் வியக்க வைக்கும் கருப்பு படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2026 11:54 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வரும் இவரது நடிப்பில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகம் எதிர்பார்க்கப்பட்டு இருந்தப் படம் கருப்பு. இந்த 2026-ம் ஆண்டில் கடந்த மே மாதம் 15-ம் தேதி பல சிக்கல்களுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்கள் முடிவடைந்து தற்போது 4-வது வாரத்திற்கு எட்டி உள்ளது. இதனை படக்குழுவினரும் ரசிகர்களும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் அவர் முக்கிய வேடத்தி நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. ஃபேண்டசி ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் வசூல் குறித்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

வசூலில் 350 கோடிகளை நெருங்கும் கருப்பு படம்:

அதன்படி கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்கள் முடிவடைந்து தற்போது 5-வது வாரத்தில் எட்டி உள்ளது. மேலும் இந்தப் படம் தற்போது வரை உலக அளவில் சுமார் ரூபாய் 340 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை வெளியான படங்களிலேயே 300 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்தது இந்த கருப்பு படம் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது சூர்யாவின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… ஜஸ்ட் காட் திங்க்ஸ்… இன்று இரவு முதல் ஓடிடியில் காணக் கிடைக்கும் கருப்பு படம்!

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 29 படத்தின் டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் வீடியோ

Follow Us