AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் எப்போது?.. திரைத்துறையினர் பகிர்ந்த தகவல்!!

Bharathiraja's last rites: மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் இத்தகைய உயரிய அரசு மரியாதையை அறிவித்த தமிழக அரசுக்குக் கலை உலகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் திரையுலகப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் எப்போது?.. திரைத்துறையினர் பகிர்ந்த தகவல்!!
பாரதிராஜா
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Jun 2026 14:27 PM IST

தமிழ் திரையுலகின் வரலாற்றுப் போக்கையே மாற்றியமைத்த ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை அவரது குடும்பத்தாரின் சார்பில் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகப் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளனர். பாரதிராஜாவின் மறைவு குறித்துப் பேசிய திரையுலகினர், “தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய கிரீடத்தைப் பெற்றுத் தந்தவர் பாரதிராஜா. அவர் தமிழ் சினிமாவிற்கு வந்த பிறகுதான் வாழ்வியலும், கிராமத்து அழகியலும் திரையில் பேசப்பட்டன. ஒரு சிறந்த கலைஞன் தன்னை மட்டும் உருவாக்கிக் கொள்பவன் அல்ல, பல கலைஞர்களையும் உருவாக்குபவன்.

இதையும் படிக்க: மறைந்த பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!

அந்த வகையில் இன்று திரையுலகில் மிளிரும் பல கலைஞர்கள் பாரதிராஜாவால் உருவாக்கப்பட்டவர்கள் அல்லது அவரது உந்துசக்தியால் தங்களை உருவாக்கிக் கொண்டவர்கள். மரணம் என்பது அவரது பௌதிக உடலுக்கு மட்டும்தான் என்றும், அவரது கலைப் படைப்புகள் மூலம் தமிழ் மக்களின் கனவுகளையும் பண்பாட்டுப் பெருமைகளையும் விளக்கி அவர் என்றும் வாழ்வார்” என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

சென்னையில் இன்று இறுதி அஞ்சலி

மறைந்த இயக்குனர் பாரதிராஜாவின் பௌதிக உடல் தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணி வரை பொதுமக்கள் மற்றும் கலைத்துறையினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர். இதையொட்டி, கலைத்துறையினரும் ரசிகர்களும் அலை அலையாகத் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சொந்த மண்ணான தேனியில் நாளை நல்லடக்கம்:

பாரதிராஜா பிறந்த மண்ணிலேயே அவரது இறுதிப் படுக்கை அமைய வேண்டும் என்று குடும்பத் தலைமை தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று இரவு 9 மணிக்கு மேல் அவரது உடல் சென்னையிலிருந்து தேனி மாவட்டத்திற்குப் புறப்படும். நாளை (ஜூன் 11) முற்பகல் அவரது உடல், தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் பிரிவுப் பாதையின் பக்கத்தில் உள்ள ‘காற்றோடு’ என்ற கிராமத்தில் அமைந்துள்ள அவரது சொந்தப் பண்ணை வீட்டிற்குக் கொண்டு செல்லப்படும். அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பிறகு, நாளை பிற்பகல் 3 மணி அளவில் அவரது பண்ணை வீட்டிலேயே உடல் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

இதையும் படிக்க: “என் இனிய தமிழ் மக்களே”.. ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் அரை நூற்றாண்டு கால தமிழ் சினிமாவின் இமயப் பயணம்!!

தமிழக அரசுக்குத் திரையுலகினர் நன்றி:

மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் இத்தகைய உயரிய அரசு மரியாதையை அறிவித்த தமிழக அரசுக்குக் கலை உலகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் திரையுலகப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

Follow Us