AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vetrimaaran: வாடிவாசல் இல்ல.. தமிழ் முருகன் இல்ல.. வெற்றிமாறன் இணையும் அடுத்த படம் இதுவா?

Vetrimaaran Next Film: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் அரசன் திரைப்படமானது பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் எந்த படம் உருவாகிறது என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், அது குறித்த இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

Vetrimaaran: வாடிவாசல் இல்ல.. தமிழ் முருகன் இல்ல.. வெற்றிமாறன் இணையும் அடுத்த படம் இதுவா?
வெற்றிமாறனின் அடுத்த படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 Jul 2026 20:47 PM IST

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான திரை கதைகளின் மூலம் மக்களை ஈர்த்தவருபவர் வெற்றிமாறன்(Vetrimaaran). விடுதலை போராட்டம், அடக்குமுறை மற்றும் அதிரடி கேங்ஸ்டர்ஸ் போன்ற கதைக்களங்களின் படங்களை இயக்கி மிகவும் பிரபலமானவர் வெற்றிமாறன் . இவரின் இயக்கத்தில் சினிமாவில் இறுதியாக வெளியாகியிருந்த படம் விடுதலை பார்ட் 2 (Viduthalai part 2). விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் சூரியின் (Soori) நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் வெற்றிமாறன், நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் அரசன் (Arasan) என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படம் தனுஷின் வட சென்னை (Vada Chennai) படத்தின் பின்னணி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை நோக்கி ரிலீஸ் தேதி திட்டமிட்டுவரப்படுகிறது. இந்த படத்திற்கு பின் வெற்றிமாறன் யாருடன் எந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது குறித்து தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: என்ன விஜய் டிவி ரசிகர்களே தயாரா? விரைவில் வரும் புது தொடர்.. அட இந்த சீரியலின் ரீமேக்கா?

வெற்றிமாறனின் அடுத்த படம் யாருடன்:

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது அரசன் படத்தை இயக்குவதில் பிஸியாகவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் 70 முதல் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாம். இதில் சிலம்பரசன், யோகலட்சுமி, ஆட்ரியா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார்கள். இப்படத்திற்கு பின் வாடிவாசல் அல்லது தமிழ் முருகன் திரைப்படத்தின் வெற்றிமாறன் இணைகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புது தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ராமாயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது – நடிகர் யாஷ்

இயக்குநர் வெற்றிமாறன் அரசன் படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் புது படத்தில் இணைகிறாராம். இதை விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளாராம். தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் படம் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கனவே விடுதலை 1 மற்றும் 2 போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. இதில் இறுதியாக வெளியான விடுதலை பார்ட் 2 படமானது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும், தற்போது இதே கூட்டணியில் 3வது படம் உருவாகவுள்ளதாம். இந்த படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us