DC Movie: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ பட முழு ஆல்பம் வெளியானது!
DC Movie Full Album: தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்துவந்த லோகேஷ் கனகராஜ், ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புது திரைப்படம்தான் டிசி. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள நிலையில், தற்போது இப்படத்தின் முழு ஆல்பம் பாடல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற இயக்குநராக பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் இயக்குநராக இதுவரை கிட்டத்தட்ட 5 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார். இவர் இயக்குநராக இயக்கியிருந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. இறுதியாக இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) இதில் நாயகனாக நடித்திருந்த நிலையில், சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. கலவையான விமர்சனங்கள் இதற்கு கிடைத்திருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றியை பெற்றிருந்தது. அந்த வகையில், இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம்தான் டிசி (DC). இதில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாமிகா கபி (Wamiqa Gabbi) மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (Sanjana Krishnamoorthy) என இரு நடிகைகள் நடித்துள்ளனர்.
இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 07ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முழு ஆல்பம் ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான டிசி படத்தின் முழு ஆல்பம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.




இதையும் படிங்க: எனது படங்களில் வலிமை தான் மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது – இயக்குநர் எச். வினோத்
டிசி படத்தின் முழு ஆல்பம் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The wait is over!🎸 Finally, The #DC Audio is Out Now! Experience the electrifying album!♥️💥
🎵 https://t.co/wNVQP8xXiP #DC releasing worldwide August 7th@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy @mukesh_DOP @editor_prasanna @skannanartdir… pic.twitter.com/CqU5Qhbppx
— Sun Pictures (@sunpictures) July 24, 2026
டிசி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது:
லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புது படம்தான் டிசி. இதற்கு முன் லோகேஷ் மாஸ்டர், காட்டாளன் மற்றும் ஜன நாயகன் போன்ற படங்களில் கேமியோ வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். தற்போது முழுவதுமாக படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்க, இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது முழுவதுமாக தயாரித்துள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையில், இப்படத்தின் முழு ஆல்பம் பாடல்களும் வெளியாகிவிட்டது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், ஒரு சின்ன இசை வெளியீட்டு விழாவை போல, நேற்று (24/07/2026) நடைபெற்றிருந்தது.
இதையும் படிங்க: குடும்பங்கள் கொண்டாடிய தலைவன் தலைவி படம் ஒரு ஆண்டை நிறைவு செய்தது
இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 07ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பெரிதாக நடைபெறாது என வட்டாரங்கள் கூறுகிறது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்ட நிலையில், நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் புரோமோஷன் பணிகளும் ஏற்கனவே தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.