DC Movie: லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ‘பும் பா டிகா டிகா’ பாடல் வெளியீடு!
Bum Baa Diga Diga Song: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ள புது படம்தான் டிசி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், தற்போது 2வது பாடலான பும் பா டிகா டிகா வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக பிரபலமாகி, மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் முதலமைச்சர் விஜய் (CM Vijay) முதல் கமல்ஹாசன் (Kamal Haasan) வரை பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, அவருடன் பான் இந்திய நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம்தான் டிசி (DC). இதை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Arun Matheswaran) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டிசி படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி (Wamiqa Gabbi) நடித்துள்ளார்.
மேலும் அவருடன் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ளது. ஏற்கனவே ஹாங்கோவ என்ற பாடல் வெளியாகியிருந்தது. தற்போது இப்படத்திலிருந்து “பும் பா டிகா டிகா” என்ற 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: நிவின் பாலி – மமிதா பைஜூவின் பெத்லகேம் குடும்பா யூனிட் பட ரிலிஸ் எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
டிசி திரைப்படத்திலிருந்து வெளியான 2வது பாடல் பும் பா டிகா டிகா குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Tham tharikida thithithom, Yudham murugana sabhdham thom!🧨🔥
Volume up and feel the rush. #BumBaaDigaDiga is out now! #DC▶️ https://t.co/3WOQMN2LS0@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy #Vedan @mukesh_DOP @editor_prasanna @skannanartdir… pic.twitter.com/9xqOahGCVc
— Sun Pictures (@sunpictures) July 18, 2026
டிசி திரைப்படத்தின் புது ரிலீஸ் தேதி:
இப்படத்தில் நடிகராக லோகேஷ் கனகராஜ் நடிக்க அவருடன், நடிகர்கள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, வாமிகா கபி, கஸ்தூரி ராஜா, அவினாஷ் ஜவஹர் சக்தி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இதில் லோகேஷ் கனகராஜ் “தேவதாஸ்” என்ற கதாபாத்திரத்திலும், வாமிகா கபி “சந்திரா” என்ற கதாபாத்திரத்திலும் மற்றும் நடிகை சஞ்சனா பார்வதி என்ற வேடத்திலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: தேசிய விருதுகள் அறிவிப்பு – ராயன், மெய்யன் படங்களுக்கு விருது- விவரம் இதோ
இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் 2026ம் ஆண்டில் ஜூலை 31ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின் ஜன நாயகன் பட வெளியீட்டியுன் காரணமாக வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 07ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசி படத்துடன் மோதும் படங்கள்:
இந்த டிசிபடத்துடன், முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் வெளியாகவுள்ளதாம். இதில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா இணைந்து நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.