AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

DC Movie: லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ‘Hangova’ என்ற முதல் பாடல் வீடியோ வெளியீடு!

Hangova Song: இயக்குநராக தமிழ் சினிமாவை கலக்கிவந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது டிசி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படமானது வெளியாக தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத்தின் இசையில் வெளியான இப்பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

DC Movie: லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ‘Hangova’ என்ற முதல் பாடல் வீடியோ வெளியீடு!
ஹங்கோவ பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Jul 2026 18:24 PM IST

தென்னிந்திய சினிமாவில் இயக்குநராக மிகவும் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் முதல்வர் விஜய் (CM Vijay) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இவர் இயக்குநராக இதுவரை 5 படங்களை இயக்கியிருக்கும் நிலையில், தற்போது சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் (Arun Matheswaran) இயக்கத்தில், இவர் நடித்துள்ள புது படம்தான் டிசி (DC) (தேவதாஸ் சந்திரா). இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் பாலிவுட் நடிகை வாமிகா கபி (Wamiqa Gabbi), தமிழ் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (Sanjana Krishnamoorthy) என இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் இதில் அவினாஷ் ரகுநந்தன், கஸ்தூரி ராஜா மாற்றம் அருண் மாதேஸ்வரன் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் தயாராக, வரும் 2026ம் ஆண்டு ஜூலை 31ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதற்கு அனிருத் (Anirudh) இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலான “Hangova” வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்திற்கு எப்போது சென்சார் சான்றிதழ் கிடைக்கும்? வைரலாகும் தகவல்

லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் முதல் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த ஹாங்கோவ என்ற பாடலை அனிருத் பாட, ஹைசன்பெர்க் என்ற பாடலாசிரியர் இந்த் பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் முழுவதும் கருப்பு வெள்ளை தீமில் அமைந்துள்ளது. இந்த பாடலில் லோகேஷ் கனற, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் வாமிகா கபி ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத்தும் இந்த் பாடலில் இடம்பெற்றிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜின் டிசி பட சென்சார் அப்டேட்:

இந்த டிசி படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில வரன்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் படிங்க: வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்… 14 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட்டான நான் ஈ படம்

இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் “தேவதாஸ்” என்ற வேடத்திலும், வாமிகா கபி “சந்திரா” என்ற வேடத்திலும் மற்றும் சஞ்சனா “பார்வதி” என்ற வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தில் அதிகம் ரத்தம், ஆக்ஷன் மற்றும் வன்முறை நிறைந்த காட்சிகள் இருக்கும் நிலையில், இதற்கு சென்சார் குழு “ஏ” தரச் சான்றிதழை பரிந்துரை செய்துள்ளாராம். இன்னும் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Follow Us