ஜன நாயகன் படத்திற்கு எப்போது சென்சார் சான்றிதழ் கிடைக்கும்? வைரலாகும் தகவல்
Jana Nayagan Movie Censor And Release Update | தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக உருவாகி உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள தளபதி விஜய் இதுவரை 68 படங்களில் நடித்து உள்ளார். முன்னதாக அவரது நடிப்பில் வெளியான சிலப் படங்கள் சின்ன சின்ன பிரச்சனைகள் காரணமாக தடைகளை சந்தித்து உள்ளது. ஆனால் அவரது நடிப்பில் இறுதியாக உருவான ஜன நாயகன் படம் தான் அதிக பிரச்சனையை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் 69-வது படமாக உருவாகி உள்ளது ஜன நாயகன் படம். இயக்குநர் எச்.வினோத் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கே வெளியாக இருந்த ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்தப் படம் வெளியிடுவதாக இருந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருந்ததால் படத்தின் வெளியீட்டை படக்குழு நிறுத்தி வைத்தது. தொடர்ந்து படத்திற்கு சென்சார் கோரி படக்குழு தணிக்கை குழு பின்பு தொடர்ந்து வந்தாலும் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் கிடைக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.




ஜன நாயகன் படத்திற்கு எப்போது சென்சார் சான்றிதழ் கிடைக்கும்?
ஜன நாயகன் படத்திற்குத் தணிக்கைக் குழு A சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்திலிருந்து 13 காட்சிகளை நீக்குமாறு படக்குழுவினருக்கு அக்குழு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் ஜூலை மாதம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜன நாயகன் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியின் அடிப்படையில், வேறு பல படங்களின் வெளியீட்டுத் தேதிகளும் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜன நாயகன் படத்தின் சென்சார் சான்றிதல் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிடைக்கப்பெறும் என்றும் அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… தென்னிந்தியத் படங்களைப் பார்க்கும்போது தன்னம்பிக்கை ஏற்படுகிறது – இயக்குநர் அனுராக் காஷ்யப்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan is expected to receive its censor certificate within the next two or three days. The makers are planning to release the film on July 23. pic.twitter.com/qrIWSNlxGB
— Movie Tamil (@_MovieTamil) July 6, 2026
Also Read… Sai Abhyankkar: அல்லு அர்ஜுன் சார் ஒரு சிறந்த இசை ரசனையாளர் – சாய் அபயங்கர்