AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

Benz movie shooting update | தமிழ் சினிமாவில் ஒரு சினிமாட்டிக் யூனிவர்சாக உருவாகி வருகிறது லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ். இந்த யூனிவர்ஸில் ஒரு பகுதியாக உருவாகி வரும் பென்ஸ் படத்தின் ஷூட்டிங் அப்டேட்டை என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்
பென்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jul 2026 16:48 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. வெளி நாடுகளில் சினிமாட்டிக் யூனிவர்சில் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கி உள்ளார். அதன்படி கைதி படத்தில் தொடங்கிய இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொடர்ந்து விக்ரம், லியோ ஆகியப் படங்களுடன் இணைந்து உள்ளது. இந்தப் படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் கனெக்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களின் அடுத்த கிளையாக உள்ளது பென்ஸ் படம். இந்தப் படத்திற்கு திரைக்கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி உள்ளார்.

ஆனால் இந்த பென்ஸ் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜே இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தின் தற்போதைய நிலை என்ன?

இந்த நிலையில் இந்த பென்ஸ் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி வில்லனாக நடித்து உள்ளார். அவரது அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்ட போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர்களுடன் இணைந்து நடிகை சம்யுக்தா நாயகியாக நடித்து உள்ளார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வரும் நிலையில் படத்தின் முக்கிய காட்சிகளை படக்குழு எடுத்து முடித்ததாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… படமே ரிலீஸாகல.. ஆனால் இயக்குநருக்கு விலையுயர்ந்த பரிசை கொடுத்த விஷ்ணு விஷால்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கட்டா குஸ்தி 2 முதல் டார்க் வரை… தமிழ் சினிமாவில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

Follow Us