லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் அப்டேட்
DC Movie Release Update | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வல வந்து தற்போது நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் டிசி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மாநகரம் என்ற படத்தை தமிழ் சினிமாவில் இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி என்ற படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக மாறினார். அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களான கமல் ஹாசன், தளபதி விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை வைத்து படங்களை இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் தற்போது படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கியுள்ளார். அதன்படி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ள டிசி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.




ஜூலை 31-ம் தேதி வெளியாகும் லோகேஷ் கனகராஜின் டிசி படம்:
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த டிசி படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகின்ற 31-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை வமிகா கபி நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஜேசன் சஞ்சயை ஸ்கூல் படிக்கும் போது கடத்திய நடிகர் – வைரலாகும் வீடியோ!
டிசி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Devadas and Chandra are ready to light up the big screen! #DC Releasing worldwide from July 31❤️🔥#DCFromJuly31@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial @WamiqaG @isanjkayy @mukesh_DOP #PrasannaGK #KannanS @PC_stunts @kabilanchelliah#DCTheBloodyValentineFromJuly31 pic.twitter.com/DaJLz6lx9D
— Sun Pictures (@sunpictures) July 1, 2026
Also Read… இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு செக் வைத்த டெல்லி உயர் நீதிமன்றம்