இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு செக் வைத்த டெல்லி உயர் நீதிமன்றம்
Delhi High Court About Ilaiyaraaja Case | இளையராஜா மற்றும் சரிகம நிறுவனம் இடையேயான வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் இன்று அந்த வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவை அளித்துள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளராக உள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. தொடர்ந்து 1500 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவான படங்களுக்கு இசையமைத்து உள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது இசையில் முன்னதாக வெளியான பாடல்களும் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியான பாடல்கள் தற்போது உள்ள ஜென்சி மற்றும் ஆல்ஃபா தலைமுறை என்று அழைக்கப்படுபவர்களிடம் நல்ல கவனத்தை பெற்று வருகிறது. மூன்று தலைமுறை மக்கள் கொண்டாடும் ஒரு இசையமைப்பாளாக உள்ள இளையராஜாவின் இசை ஒரு பக்கம் வைரலாகி வருவது போல அவரது வழக்கும் ஒரு பக்கம் வைரலாகி வருகின்றது.
அதன்படி சமீப காலமாக படங்களில் இளையராஜாவின் பாடல்கள் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக காப்பி ரைட்ஸ் வழக்குகளை தொடர்ந்து வருகிறார். இது ஒன்று இரண்டு அல்ல பலப் படங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள் மட்டும் இன்றி இசை லேபில்களுக்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றது.




இளையராஜாவிற்கு செக் வைத்த டெல்லி உயர் நீதிமன்றம்:
அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னதாக தனது பாடல்களை பயன்படுத்திக்கொள்ள சில இசை லேபில்களுக்கு அனுமதி வழங்கி இருந்தார். இப்படி இருக்கும் சூழலில் சரிகம என்ற இசை லேபிலுக்கும் இடையே நடைப்பெற்று வந்த காப்பி ரைட்ஸ் வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணை போது இளையராக இசையமைப்பாளராக அறிமுகம் ஆன அன்னக்கிளி படம் முதல் சுமார் 134 படங்களின் பாடல்களை பயன்படுத்த வருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் சரிமக நிறுவனத்திற்கு ஆதரவாக வழக்கு சென்று வருவது தெரிகிறது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடிகளுக்கு விற்பனையா? வைரலாகும் தகவல்