AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கதிரும் நானும் முன்பே ஒரு படத்தில் நடித்து இருந்தோம் – நடிகை திவ்ய பாரதி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

Actress Divya Bharathi recent interview viral on social media | தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை திவ்ய பாரதி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கதிரும் நானும் முன்பே ஒரு படத்தில் நடித்து இருந்தோம் – நடிகை திவ்ய பாரதி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
திவ்ய பாரதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2026 18:58 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை திவ்ய பாரதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் ஷ்ருஸ்டி டாங்கே நடிப்பில் வெளியான படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை திவ்ய பாரதி. இந்தப் படத்தில் நடிகை ஷ்ருஸ்டி டாங்கேவின் தோழியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு பிறகு தனது இரண்டாவது படத்திலேயே நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி தமிழ் சினிமாவில் வெளியான பேச்சுளர் என்ற படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நாயகியாக நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு சினிமவிலும் படங்களில் நடித்து வருகிறார் நடிகை திவ்ய பாரதி. இவர் படங்களில் மட்டும் இன்றி இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை திவ்ய பாரதி நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளது லிங்கம் இணையதள தொடர்.

கதிரும் நானும் முன்பே ஒரு படத்தில் நடித்து இருந்தோம்:

அந்த தொடரில் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கதிர் உடன் நடித்த படம் குறித்து திவ்ய பாரதி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி திவ்ய பாரதி அளித்த பேட்டியில் கூறியதாவது, கதிரும் நானும் ஏற்கனவே ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ (Passion Studios) நிறுவனத்துடன் இணைந்து ‘ஆசை’ என்ற திரைப்படத்தில் பணியாற்றியிருந்தோம். அதன் பிறகு, அந்தத் தயாரிப்பாளர் இந்தப் பாத்திரத்திற்காக என்னை அணுகினார். ஆரம்பத்தில் இதில் நடிக்கலாமா என்று எனக்குத் தயக்கம் இருந்தது; ஆனால், இந்தக் கதாபாத்திரத்திற்கு நான் தான் சரியான தேர்வாக இருப்பேன் என்று அவர் உறுதியாக நம்பினார்.

Also Read… விஜய் டிவியில் தொடங்கிய ஆறு மாதத்திலே முடிவுக்கு வந்த சீரியல்.. அட இதுவா?

இணையத்தில் வைரலாகும் திவ்ய பாரதியின் பேச்சு:

Also Read… Kajal Aggarwal: நடிகர்களை விட நடிகைகளுக்கே சவால்கள் அதிகம் – மனம்திறந்த காஜல் அகர்வால்!

Follow Us