AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Modha Rathiri: அனிஷ்மாவின் ஸ்பெஷல் டே.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மொத ராத்திரி படக்குழு!

Anishma Anilkumar New Film: கடந்த 2025ம் ஆண்டில் வெளியான சிறை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் அனிஷ்மா அனில்குமார். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் இவர் ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், இவர் புதிதாக நடித்துவரும் படம்தான் மொத ராத்திரி. தற்போது இப்படக்குழு அனிஷ்மாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Modha Rathiri: அனிஷ்மாவின் ஸ்பெஷல் டே.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மொத ராத்திரி படக்குழு!
அனிஷ்மா அனில்குமார் மொத ராத்திரி திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Jun 2026 12:49 PM IST

மலையாளம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அனிஷ்மா அனில்குமார் (Anishma Anilkumar). இவர் மலையாளத்தில் பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில் தமிழில் இவருக்கு அறிமுக திரைப்படமாக அமைந்திருந்தது சிறை (Sirai). விக்ரம் பிரபுவின் (Vikram Prabhu) 25வது படமாக வெளியாகியிருந்த இப்படத்தில், மிகவும் முக்கியமான வேடத்தில் அனிஷ்மா நடித்திருந்தார். இப்படமானது திரையரங்குகளில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து கென் கருணாஸ் (Ken Karunaas) இயக்கி நடித்திருந்த யூத் (Youth) படத்திலும் லீட் நாயகியாக நடித்திருந்தார். இப்படமும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

இப்படங்களை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இவர் நடித்துவரும் புது படம்தான் மொத ராத்திரி (Modha Rathiri). இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிய நிலையில், அனிஷ்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: ஓம் படத்துடன் மோதுகிறதா ரஜினியின் ஜெயிலர் 2?.. தனுஷ் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

அனிஷ்மாவின் முதல் பார்வைப் போஸ்டரை பகிர்ந்த மொத ராத்திரி படக்குழு:

மொத ராத்திரி திரைப்படம் :

இந்த மொத ராத்திரி திரைப்படத்தில் ரிஷிகாந்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனிஷ்மா அனில்குமார் நடித்துவருகிறார். மேலும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்க, குட் பேட் அக்லி, டியூட் போன்ற படங்களை தயாரித்திருந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் என்பவர் இசையமைத்துவரும் நிலையில், சிறப்பாக உருவாக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: சாய் பல்லவி நடித்த அந்த படத்தை நான் ரிஜெக்ட் பண்ணேன் – ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஓபன் டாக்!

இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. நடிகர் ரிஷிகாந்த் ஏற்கனவே மேட் இன் கொரியா என்ற படத்தில் பிரியங்கா மோகனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து அனிஷ்மா அனில்குமார் நடிக்கும் இந்த மொத ராத்திரி படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் காதல், காமெடி மற்றும் ரோமெண்டிக் கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம். இப்படம் 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us