AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Aiswarya Lekshmi: சாய் பல்லவி நடித்த அந்த படத்தை நான் ரிஜெக்ட் பண்ணேன் – ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஓபன் டாக்!

Aiswarya Lekshmi Rejected Movie: தமிழ், மலையாளம் என மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவரின் நடிப்பில் கட்டா குஸ்தி 2 படமானது வெளியாகி தயாராகியுள்ளது. இப்படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சாய் பல்லவி நடித்த படத்தை, இவர் முதலில் ரிஜெக்ட் செய்த காரணம் என்ன என்பது பற்றி தெரிவித்துள்ளார்.

Aiswarya Lekshmi: சாய் பல்லவி நடித்த அந்த படத்தை நான் ரிஜெக்ட் பண்ணேன் – ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஓபன் டாக்!
சாய் பல்லவி மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Jun 2026 12:09 PM IST

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி (Aiswarya Lekshmi). இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற சினிமாவில் லீட் கதாநாயகியாக நடித்து அசத்தியிருக்கிறார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருக்கிறது. மலையாளம் சினிமாவில் தொடர்ந்து நாயகியாக நடித்துவந்த இவருக்கு, தமிழில் அறிமுக படமாக அமைந்தது ஆக்ஷன் (Action). சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் விஷால் நடித்திருந்த இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். அதிலும் மணி ரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) பட இரு பாகங்களிலும் பூங்குழலி என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

மேலும் விரைவில் இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம்தான் கட்ட குஸ்தி 2 (Gatta Kusthi 2). இதில் விஷ்ணு விஷாலுக்கு (Vishnu Vishal) இவர் ஜோடியாக நடிக்க, ஆக்ஷன் பேமிலி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரோமோஷன் தொடர்பாக நேர்காணல் பேசிய ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தான ரிஜெக்ட் செய்து சாய் பல்லவி (Sai Pallavi) நடித்து ஹிட் கொடுத்த படம் பற்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சூர்யா 47 படத்தில் ஷூட்டிங் நிறைவடைந்ததா? – இணையத்தில் வைரலாகும் பதிவு!

சாய் பல்லவி நடித்து ஹிட் கொடுத்த படத்தை முதலில் தான் நிராகரித்தது பற்றி ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேச்சு:

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேசுகையில், “கோவிட் காலகட்டம் வருவதற்கு முன், கார்கி படத்தின் கதை முதல் முதலில் என்னிடம் சொல்லப்பட்டிருந்தது. அப்போது நான் அந்த படத்தை ரிஜெக்ட் செய்துவிட்டேன். ஏனென்றால் அப்படத்திற்கு பெரிய கதாநாயகி தேவைப்பட்டது. அதனால் நான் அதை நிராகரித்தேன்.

இதையும் படிங்க: நடிகர்களை விட நடிகைகளுக்கே சவால்கள் அதிகம் – மனம்திறந்த காஜல் அகர்வால்!

ஆனால் தற்போது அந்த கதை எனக்கு கிடைத்திருந்தால், நானே உடனே வந்து சாய் பல்லவியின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன். மேலும் இயக்குநரின் தொலைநோக்கு பார்வையின் மீது நம்பிக்கை வைத்து, நானே கார்கி படத்தை இணைந்து தயாரித்திருப்பேன்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கார்கி படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேசியது தொடர்பான பதிவு:

ஆனாலும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கார்கி படத்தில் சிறிய கேமியோ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டா குஸ்தி 2 படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவந்த நிலையில், 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் வெளியாகவுள்ளது.அந்த வகையில் தற்போது இப்படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us