AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Heartin: எதிர்பாராத டுவிஸ்ட்.. முக்கோண காதல் கதையில் ஒரு அழகான படம்.. மடோனா செபாஸ்டியனின் ஹார்டின் படம் எப்படி இருக்கு?

Heartin Movie: மலையாளம் சினிமாவில் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் மடோனா செபாஸ்டியன். இவர் கிட்டத்தட்ட ஆண்டுக்கு பின் தமிழில் நடித்துள்ள புது படம்தான் ஹார்டின். இப்படமானது இன்று (26/06/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Heartin: எதிர்பாராத டுவிஸ்ட்.. முக்கோண காதல் கதையில் ஒரு அழகான படம்.. மடோனா செபாஸ்டியனின் ஹார்டின் படம் எப்படி இருக்கு?
ஹார்டின் திரைப்பட விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Jun 2026 16:29 PM IST

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக, மலையாளம் டூ தமிழ் சினிமாவை கொள்ளையடிக்கும் நடிகையாக இருந்துவருபவர் மடோனா செபாஸ்டியன் (Madonna Sebastian). இவர் தமிழில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் தமிழில் நடித்துள்ள புது படம்தான் ஹார்ட்டின் (Heartin). இப்படத்தில் மடோனா செபஸ்டியன் ஹீரோவாக நடிக்க, அவருடன் சனந்த் ரெட்டி *Sananth Reddy) ஹீரோவாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பேட்ட படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது, ஹார்டின் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் (Kishore Kumar) இயக்க, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. முக்கோண காதல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் மடோனா செபாஸ்டியன், சனந்த் ரெட்டி மற்றும் இமயா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

அதிலும் இமயா என்பவர் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் ஆவார். இவர்களின் கூட்டணியில் உருவாகியிருந்த ஹார்டின் படமானது 2026ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அதற்க்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: பத்ம பூஷன் விருது பெற்ற மம்முட்டி… கொண்டாடிய ஓம் படக்குழுவினர்

ஹார்டின் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் :

இந்த ஹார்ட்டின் படமானது ஒரு முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம். இந்த திரைப்படத்தில் நடிகர் சனந்த் ரெட்டி மடோனா செபாஸ்டியனை காதலிக்க, சனந்த் ரெட்டியை இமையா காதலிக்கிறார். இதனால் அவரின் மேடேத்தும் சனந்த் ரெட்டிக்கு ஈர்ப்பு வருகிறது. இவர்கள் மூவருக்குள்ளும் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டுதான் இப்படமானது இயக்கப்பட்டுள்ளது.

ஹார்ட்டின் படத்தில் நடிகர்களின் நடிப்பு எப்படி இருக்கு:

நடிகை மடோனா செபாஸ்டியன் பல படங்களில் கதாநாயகியாக நடித்து கலக்கியுள்ளார். அதே போலவே இப்படத்திலும் அவரின் நடிப்பில் குறை ஒன்றும் இல்லை. நடிகர் சனந்த் ரெட்டி படங்களில் துணை வேடங்களில் நடித்துவந்த நிலையில், ஹீரோவாக இவர் நடிக்கும் முதல் படாகவே இப்படம் அமைந்துள்ளது. இதில் இவரின் நடிப்பும் சிறப்பாக உள்ளது. மேலும் தங்கம் தென்னரசுவின் மகள் இமையாவும் இப்படத்தின் மூலமாகவே கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். நடிகர்களின் நடிப்பில் எந்த வித பிரச்னையும் இல்லை.

இதையும் படிங்க: சுந்தர் சி – குஷ்பூ தம்பதியின் மூத்த மகள் திருமணம்… ஒன்று கூடிய பிரபலங்கள்

ஹார்ட்டின் படத்தை தியேட்டர்களில் சென்று பார்க்கலாமா:

காதல், காமெடி மற்றும் திருப்பங்களுடன் கூடிய கதையை பார்க்க விரும்புபவர்களுக்கு இது ஏற்ற திரைப்படம். இப்படமானது பீல் குட் கதைக்களத்தில் தயாராகியிருந்த நிலையில், தற்போது திரையரங்குகளில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. கண்டிப்பாக ஒருமுறை திரையரங்குகளில் பார்க்க சிறப்பான பாடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us