பெண்கள் மீதான ஸ்டீரியோடைப்பை பிளாஸ்ட் செய்த பிளாஸ்ட் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!
Blast movie ott review here | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பிளாஸ். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் 28-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பிளாஸ். இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் இந்த பிளாஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முன்னணி நடித்து இருந்தார். அவரது மனைவியாக நடிகை அபிராமி நடித்து இருந்தார். இவர்களின் மகளாக நடிகை பிரீத்தி முகுந்த் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விவேக் பிரசன்னா, ஜான் கோக்கன், அர்ஜுன் சிதம்பரம், திலீபன், வினோத் சாகர், பவன், பாலா ஹாசன், பி.எல்.தேனப்பன், ரமேஷ் நாராயணன், அப்பல்லோ ரவி மற்றும் மேத்யூ வர்கீஸ் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பரசுரு இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
பிளாஸ்ட் படம் உண்மையிலேயே பிளாஸ்டாக இருந்ததா?
கராத்தே மாஸ்டராக அர்ஜுன் நடித்து இருந்த நிலையில் ஹவுஸ் ஒய்ஃபான அபிராமி வீட்டிலேயே டெய்லரின் செய்து வருகிறார். மேலும் அர்ஜுனின் தம்பி விவேக் பிரசன்னா மெடிகல் ஷாப் நடத்தி வருகிறார். அர்ஜுன் அபிராமி மகள் தான் பிரீத்தி முகுந்த். பிரீத்தி முகுந்த் சிறு வயதில் வீட்டி அருகிள் இருக்கும் சிறுவனிடம் அடி வாங்குகிறார். அவனை எதிர்த்து அடிக்க முயற்றி செய்து அவரால் முடியவில்லை. இதனால் தன்னை தற்காத்துகொள்ள அப்பாவிடம் இருந்து கராத்தே கற்றுக் கொள்கிறார்.
அப்படி கராத்தே சொல்லி தரும் அர்ஜுன் தனது மகளுக்கு மற்றவர்களுக்கு உதவும் குணம் வேண்டும் என்று அதையும் சொல்லி கொடுக்கிறார். நமக்கு தெரிந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உதவி செய்வது போல தெரியாத ஒருவருக்கு பிரச்சனை என்றாலும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லி கொடுக்கிறார்.
Also Read… தர்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
இப்படி வளர்ந்த பிரீத்தி முகுந்த் தன்னை சுற்றி யாருக்காவது உதவி வேண்டும் என்றால் யோசிக்காமல் செய்கிறார். இதனால் பல சிக்கல்களிலும் மாட்டிக் கொள்கிறார். இப்படி இருக்கும் சூழலில் பிரீத்தி முகுந்தால் ஒரு பிரச்சனை வீடு தேடு வருகிறது. தங்களது மகளை காக்க அர்ஜுன் மற்றும் அபிராமி உள்ளிட்ட குடும்பத்தினர் என்ன செய்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… 3 ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதி… முகத்தில் வீக்கம்… விஷ்ணு விஷால் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்



