AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரஜினிகாந்தை இயக்க கிடைத்த வாய்ப்பு – சிம்புவிற்கு நன்றி சொன்ன அஸ்வத் மாரிமுத்து

Director Ashwath Marimuthu thanks to Simbu and AGS | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள தர்மன் படத்தின் தொடக்க விழா இன்று நடைப்பெற்ற நிலையில் அஸ்வத் மாரிமுத்து பேசியது இனையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்தை இயக்க கிடைத்த வாய்ப்பு – சிம்புவிற்கு நன்றி சொன்ன அஸ்வத் மாரிமுத்து
அஸ்வத் மாரிமுத்துImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jun 2026 18:42 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. தமிழ் சினிமாவில் வெளியான ஓ மை கடவுளே. நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியானது ட்ராகன் படம். கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும்வ் அசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிம்புவின் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அந்தப் படத்திற்காக அஸ்வத் மாரிமுத்து வேலை செய்து கொண்டிருந்த போதே அவருக்கு ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று நடைப்பெற்ற நிலையில் அந்த விழாவில் அஸ்வத் மாரிமுத்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிம்புவிற்கு நன்றி சொன்ன அஸ்வத் மாரிமுத்து:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய சிலம்பரசன் TR மற்றும் AGS ஆகியோருக்கு நன்றி. நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தர்மன் என்பது ‘5 ரூபாய் டாக்டர்’ பற்றிய கதை அல்ல. இது மிகுந்த கம்பீரமும் அதிரடித் தன்மையும் கொண்ட தர்மன் டாக்டர் பற்றிய கதை. இப்படம் படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களின் கலவையாக அமையும். இது குடும்பங்கள் ரசிக்கக்கூடிய ஒரு விறுவிறுப்பான திரைப்படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… Arasan: அன்பு மற்றும் அரசனின் சந்திப்பு.. சிம்புவின் அரசன் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேச்சு:

Also Read… கருப்பு படத்திலிருந்து வெளியானது கருப்பா கூட வா வீடியோ பாடல்

Follow Us