AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தயாராகி வரும் சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Chennai 28 Part 3 movie update viral on social media | தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது சென்னை 28 படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம். இந்த நிலையில் மூன்றாவது பாகம் தற்போது உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தயாராகி வரும் சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சென்னை 28Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Jun 2026 17:57 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 1982-ம் ஆண்டு முதல் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் நடிகராகவே நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து 1982-ம் ஆண்டு முதல் நடிகராக நடித்து வந்த வெங்கட் பிரபு கடந்த 2007-ம் ஆண்டு முதல் இயக்குநராக தனது பணியைத் தொடங்கினார். அதன்படி கட்னத 2007-ம் ஆண்டும் சென்னை 600 028 என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் அறிமுகம் ஆனார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிலைநிறுத்திய வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் மூன்றாவது பாகத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தயாராகி வரும் சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம்?

சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்காக மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதைக்களத்தை இயக்குநர் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ளார்; இதில் முக்கிய நடிகர்களான ஜெய் மற்றும் சிவா ஆகியோர் மீண்டும் இணைகிறார்கள். இலங்கை மற்றும் பிற இடங்களில் திரைக்கதை மற்றும் முன்-தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், கிரிக்கெட் பின்னணியிலான ஒரு முழுமையான நகைச்சுவை மற்றும் வணிக ரீதியிலான பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமையவுள்ளது. இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… அடையாளம் தெரியாமல் இருக்கும் சிறுமி யாருனு தெரியுமா? ஒரு கிண்டலால் அழகாக மாறிய நடிகை இவர்! அட இவர்தாங்க!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சென்னை வந்த பிரபல பாலிவுட் நடிகர்… ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நாயகன் கேமியோ கன்ஃபார்மா?

Follow Us