Magudam: மூன்று வேடத்தில் விஷால்.. முடிவடைந்தது மகுடம் திரைப்படத்தின் ஷூட்டிங்!
Magudam Movie Shooting Wrap: நடிகர் விஷால் இயக்குநராக இயக்கியுள்ள முதல் படம் மகுடம். இதில் அவர் மூன்று வேடங்களில் நடித்துள்ள நிலையில், சிறப்பாக ஷூட்டிங் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஷால் (Vishal). இவரை அவரின் ரசிகர்கள் “புரட்சி தளபதி” என்றும் அன்போடு அழைப்பதுண்டு. இவர் நடிகராக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பிலும், இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்கள் நடிகராக சினிமாவில் நடித்துவந்த விஷால், தற்போது இயக்குநராக புது அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்குநராக இயங்கிவந்த புது திரைப்படம்தான் மகுடம் (Magudam). இது மறைந்த ஆர்.பி.சௌத்ரியின் (R. B. Choudary) சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு இடங்களில் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவந்தது.
இதில் விஜய் மொத்தமாக மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநராகவும், நடிகராகவும் பணியாற்றிவந்த மகுடம் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாம். இது குறித்த அறிவிப்பு வீடியோவை நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: ஒவ்வொரு குழந்தையின் முதல் ஹீரோ.. தந்தையர் தினத்தை முன்னிட்டு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்!
மகுடம் திரைப்பட ஷூட்டிங் நிறைவு குறித்து நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
& it’s a wrap !!
Simultaneously post production under way !
Magudam/Makutam worldwide in theatres in July, God Bless.#Magudam #Makutam #SGF99 #DirectorVishal pic.twitter.com/stLYe7sC0M
— Vishal (@VishalKOfficial) June 21, 2026
அந்த பதிவில் விஷால், மகுடம் திரைப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அறிவித்துள்ளார். இந்த வீடியோவில், தான் நடித்துள்ள மூன்று வேடங்களையும் வெளிப்படுத்தும் விதமாக அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகுடம் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த மகுடம் படத்தில் விஷாலுடன் நடிகர்கள் அஞ்சலி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் மற்றும் ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படமாக தயாராகிவருகிறது. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் டூ நயன்தாரா வரை.. முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
மேலும் இப்படத்தை வரும் 2026ம் ஆனது ஜூலை மாதத்தில் படக்குழு வெளிட்ட திட்டமிட்டுள்ளதாம். அதன்படி வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதியில் இப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தது வருகின்றனர்.