AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: ஒவ்வொரு குழந்தையின் முதல் ஹீரோ.. தந்தையர் தினத்தை முன்னிட்டு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்!

Vishwanath And Sons Movie: இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில், சூர்யா நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இன்று (21/06/2026) உலக தந்தையர் தினம் என்ற நிலையில், இப்படக்குழு சூர்யாவின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த போஸ்டர் அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Suriya: ஒவ்வொரு குழந்தையின் முதல் ஹீரோ.. தந்தையர் தினத்தை முன்னிட்டு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Jun 2026 16:19 PM IST

தெலுங்கு இயக்குநர் மற்றும் தயாரிப்பளாருடன் சூர்யா (Suriya) கைகோர்த்திருந்த திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இதை லக்கி பாஸ்கர் மற்றும் வாத்தி போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள முதல் படம் என்ற நிலையில், இப்படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்புகள் உள்ளது. இதில் சூர்யா பிஸ்னஸ் மேனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணி ஏற்கனவே வணங்கான் படத்தில் இணையவிருந்த நிலையில், பின் விலகிவிட்டனர். அதை அடுத்ததாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

இந்த படமானது பிரம்மாண்டமான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரட்டும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 21ம் தேதியில் உலக தந்தையர் தினம் (Fathers Day 2026) கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு ஸ்பெஷல் போட ஒன்றை வெளியிட்டது.

இதையும் படிங்க: இதயம் முரளி பட டப்பிங் பணியை நிறைவு செய்த ஃபஹத் ஃபாசில் – படக்குழு வெளிட்ட வீடியோ!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட ஃபாதர்ஸ் டே ஸ்பெஷல் போஸ்டர் :

இந்த போஸ்டரில் ஒரு விலையுயர்ந்த காரின் மீது, ஒரு குழந்தையை சூர்யா வைத்திருப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவின் குழந்தையாக இது இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. சூர்யாவிற்கு கருப்பு படமானது மாபெரும் வெற்றியை கொடுத்த நிலையில், அதற்கு பின் உருவாகியுள்ள இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: என்னப்பா ரெடியா?.. யாஷின் அதிரடி கேங்ஸ்டர் படமான ‘டாக்ஸிக்’ புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது:

சமீபத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திலிருந்து பட்டாம்பூச்சி என்ற முதல் பாடல் வெளியானது. இதில் சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் நடனமானது இடம்பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் நிலையில், படங்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாம். அதன்படி வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் சூர்யா தனது 51வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை முன்னிட்டு இப்படத்தின் 2வது பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. பின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகும்.

Follow Us