கருப்பு படத்தில் சாக்லேட் காபி காட்சியை நடிக்கத் தயங்கினேன் – சாண்டி ஓபன் டாக்
Sandy Master About Karuppu Movie | கருப்பு படத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தன்னிடம் வந்து லியோ படத்தில் நடித்த சாக்லேட் காஃபி காட்சியை நடிக்குமாறு கேட்டபோது அதனை முதலில் மறுத்ததாகவும் அதற்கு காரணம் என்ன என்றும் சாண்டி வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமவில் மோஸ்ட் வாண்டன் வில்லனாக கலக்கி வருகிறார் சாண்டி மஸ்டர். இவர் தனது சினிமா வாழ்க்கையை நடிகர்களுக்கு நடனமைத்துக்கொடுக்கும் நபராக தொடங்கினார். தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்துள்ளார். இவரது கோரியோவில் வெளியான பாடல்கள் பல ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் நடனம் மட்டும் இல்லாமாமல் ஒரு நபராகவே மக்களுக்கு மிகவும் பிடித்தவர் சாண்டி. இவர் சினிமாவில் பெரிய அளவில் பிரபலாமவதற்கு முன்பு சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தான் சினிமாவில் பெரிய அளவில் பிரபலமானார்.
தொடர்ந்து நடன இயக்குநராக வலம் வந்த சாண்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் வில்லனாக நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி அடுத்தடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிகர் சாண்டி வில்லன் வேடங்களில் கலக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கருப்பு படத்தில் நடித்தது குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கருப்பு படத்தில் சாக்லேட் காபி காட்சியை நடிக்கத் தயங்கினேன்:
கருப்பு படத்தில் சாக்லேட் காபி காட்சியைச் செய்யுமாறு RJ பாலாஜி என்னிடம் கூறியபோது, அது LCU-வின் ஒரு பகுதி என்பதால் நான் தயங்கினேன். அதனால் அனுமதி வாங்குமாறு அவரிடம் சொன்னேன். RJ பாலாஜி லோகேஷ் கனகராஜ் சாரிடம் பேசி அனுமதி வாங்கினார். அந்தக் காட்சியை மீண்டும் படமாக்கும்போது, சூர்யா சார் ‘சாக்லேட் காபி… சாக்லேட் காபி’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று சாண்டி தெரிவித்துள்ளார்.
Also Read… Keerthy Suresh: தனுஷ் சாரை முதல் முறை பார்த்த தருணம் – சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!
இணையத்தில் வைரலாகும் சாண்டி பேச்சு:
#SandyMaster Recent:
“When RJBalaji told me to do Chocolate Coffee scene in #Karuppu, i hesitated as it was part of LCU & asked to take permission🤞. RJBalaji spoke to ,#LokeshKanagaraj sir & took permission🤝. It was making fun with #Suriya sir repeating ‘Chocolate… pic.twitter.com/a5dr9Jp4if— AmuthaBharathi (@CinemaWithAB) June 20, 2026
Also Read… பிச்சைக்காரன் பட கூட்டணி நூறு சாமி படத்திலும் வெற்றிப் பெற்றதா? மக்களின் கருத்து இதோ



