AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் சத்யவான் சாவித்ரி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Sathyavan Savithiri Movie Release Date Viral On Social Media | தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மிஷ்கின் உடன் இணைந்து நடித்த சத்யவான் சாவித்திரி படத்தின் ரிலீட் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் சத்யவான் சாவித்ரி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jun 2026 14:39 PM IST

மலையாள சினிமாவில் நடிகையாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் அடுத்தடுத்துப் படங்களில் நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உள்ள முன்னணி நாயகன்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாயகன்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில ஆண்டுகளாக கதையின் நாயகியாக அவரே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மேலும் கடந்த 2025-ம் ஆண்டில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான படங்களும் நாயகியை மையமாக வைத்து உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக்கட்டி காத்திருக்கின்றது.

சத்யவான் சாவித்ரி படத்தின் ரிலீஸ் எப்போது?

அதன்படி தமிழ் மொழியில் நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் உடன் இணைந்து நடித்து உள்ள படம் சத்யவான் சாவித்திரி. இந்தப் படத்தினை இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இருவரும் வழக்கறிஞர்களாக நடித்துள்ளது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே தெரிந்தது. இவர்கள் எதிர் எதிர் பாத்திரங்களில் நடித்துள்ளதும் தெரிகிறது. இப்படி இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜூலை மாதம் 24-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… விஜய் சேதுபதி – கிருத்திகா உதயநிதி படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்

சத்யவான் சாவித்திரி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பாக்கெட் நாவல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்!

Follow Us