AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டாடா பட இயக்குநரின் எழுத்தில் உருவான டார்க் படம் – ட்ரெய்லர் இதோ

Dark Movie Official Trailer | தமிழ் சினிமாவில் நடிகர் கவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டாடா. இந்தப் படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு எழுதிய டார்க் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

டாடா பட இயக்குநரின் எழுத்தில் உருவான டார்க் படம் – ட்ரெய்லர் இதோ
டார்க் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jun 2026 18:30 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் டாடா. இயக்குநர் கணேஷ் கே பாபு இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக கணேஷ் கே பாபு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்து ஹிட் நடிகர்களில் ஒருவராக மாற வேண்டும் என்று தொடர்ந்து கடின உழைப்பைப் செலுத்திக் கொண்டிருந்த கவினுக்கு இந்தப் படம் ஒரு வரபிரசாதம் போல அமைந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து அனைத்துப் படங்களும் கவின் நடிப்பில் வெற்றியைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கணேஷ் கே பாபு அடுத்ததாக எந்த இயக்குநரின் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் படத்தை இயக்கால ஒரு படத்திற்கு திரைக்கதை மட்டும் எழுதி உள்ளார். அந்தப் படம் முழுக்க முழுக்க டாடா படத்தில் இருந்து வேறுபட்டதாக உள்ளது ட்ரெய்லரைப் பார்க்கையில் தெரிகிறது.

டாடா பட இயக்குநரின் எழுத்தில் உருவான டார்க் படம்:

அதன்படி இயக்குநர் கணேஷ் கே பாபு எழுத்தில் உருவாகி உள்ள படம் டார்க். இந்தப் படத்தை இயக்குநர் கல்யாண் கே ஜெகன் இயக்கி உள்ளார். மேலும் நடிகர் அஜய் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் அஞ்சனா நேத்ருன், நட்ராஜ் சுப்ரமணி (நட்டி), கே.பாக்யராஜ், சிபி சக்ரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், ஷாகுல், நரேன் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… எம்.எஸ்.தோனியின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படம்

டார்க் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Seyon: எல்லாம் இனிதே.. சேயோன் பட ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்!

Follow Us