AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காஞ்சனா 4 படத்தில் நடிக்க பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை? வைரலாகும் தகவல்

Raghava Lawrence's horror-comedy Kanchana 4 Movie Update | தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல பாகங்களாக வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் காஞ்சனா. இந்தப் படத்தின் 4-வது பாகத்தில் நடிக்க உள்ள நாயகி குறித்த அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்கலிடையே வைரலாகி வருகின்றது.

காஞ்சனா 4 படத்தில் நடிக்க பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை? வைரலாகும் தகவல்
காஞ்சனா 4 Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Jun 2026 13:51 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 15-ம் தேதி ஜூலை மாதம் 2011-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் காஞ்சனா. நடிகர் ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஹாரர் காமெடி படமாக உருவான இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து இருந்தர். அவருடன் இணைந்து நடிகர்கள் ஆர்.சரத்குமார், தேவன், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன், பாபு ஆண்டனி, கிருஷ்ணனாக பிரியா, சர்வேஷ் ராவ், மனோபாலா, மயில்சாமி, மின்னல் தீபா, பாய்ஸ் ராஜன், மூணார் ரமேஷ், சம்பத் ராம், ஜாஸ்பர், ரங்கம்மாள் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு காஞ்சனா படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. அந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றக் காரணத்தால் அதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு மூன்றாம் பாகம் வெளியானது. அதன்படி இந்தப் படங்களை தொடர்ந்து சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 4-ம் பாகத்தை இயக்க பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தில் நடிக்க உள்ள நடிகைகள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

காஞ்சனா 4 படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாரா?

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள காஞ்சனா 4 எனும் ஹாரர்-காமெடி திரைப்படத்தில் இணைவது குறித்து நடிகை நயன்தாரா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ‘பிளாஷ்பேக்’ (கடந்த கால நிகழ்வு) காட்சிகளில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இக்கதாபாத்திரத்திற்கு ராஷ்மிகா மந்தனாவின் பெயர் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், தற்போதைய தகவல்களின்படி நயன்தாரா இக்கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளவராகக் கருதப்படுகிறார். இக்கூட்டணி உறுதியானால், ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாரா இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… Double Occupancy: 12 மணிநேரம் ஆண்.. 12 மணிநேரம் பெண்.. டபுள் டமாக்கவான டபுள் ஆக்குபென்சி படம் எப்படி இருக்கு?- விமர்சனங்கள் இதோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா 48 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – வைரலாகும் தகவல்

Follow Us