AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 48 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – வைரலாகும் தகவல்

Suriya 48 movie shooting update | தமிழ் சினிமாவில் பிசியான முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் பிசியாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் சூர்யாவின் 48-வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது என்று அப்டேட் வெளியாகி உள்ளது.

சூர்யா 48 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – வைரலாகும் தகவல்
சூர்யா 48Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2026 17:39 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழக மக்களிடையே மட்டும் இன்றி கேரளா மற்றும் ஆந்திர மாநில மக்களிடையேயும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சாதாரண மக்களில் பலக் கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் சூர்யாவை பிரபலங்கள் பலரும் தொடர்ந்து கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களை நடித்து வரும் நடிகர் சூர்யா தற்போது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிரபலமாக உள்ள இயக்குநர்களின் இயக்கத்திலும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் 46-வது படத்தை தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள  இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார்.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 47-வது படத்தை மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 48-வது படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா 48 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?

ஜெய் பீம் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் டிஜே ஞானவேல் மற்றும் சூர்யாவின் இந்த வெற்றிக் கூட்டணி சூர்யா 48 படத்திற்காக மீண்டும் இணையவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில், அதாவது அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த தகவல் இணையத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… Director Bharathiraja: அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார் இயக்குநர் இமையம் பாரதிராஜா!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இயக்குநர் சங்கரின் அடுத்தப் ப்ளான் இதுதானா? வைரலாகும் தகவல்

Follow Us