AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Krithi Shetty: நடிகைகளில் பணிநேர பிரச்சனை: தனது கருத்தை முன்வைத்த கிரித்தி ஷெட்டி!

Krithi Shetty About Actresses' Work Hours: தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் கிரித்தி ஷெட்டி. இவர் இறுதியாக தமிழில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிரித்தி ஷெட்டி, நடிகைகளின் பணிநேர பிரச்சனைகள் குறித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

Krithi Shetty: நடிகைகளில் பணிநேர பிரச்சனை: தனது கருத்தை முன்வைத்த கிரித்தி ஷெட்டி!
கிரித்தி ஷெட்டிImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Jun 2026 19:24 PM IST

டோலிவுட் சினிமாவில் பேமஸ் இளம் நடிகையாக இருந்துவருபவர் கிரித்தி ஷெட்டி (Krithi Shetty). இவர் தமிழ் சினிமாவிலும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான வா வாத்தியார் (Vaa Vaathiyaar) என்ற திரைப்படத்தின் மூலமாக கோலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து இவரின் நடிப்பில் 2வது வெளியான படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இப்படம் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியான நிலையில், இதுவும் கலவையான விமர்சனங்களை பெற்றுவந்தது. இப்படம் உலகமெங்கும் கிட்டத்தட்ட ரூ 66 கோடிகள் மட்டுமே வசூல் செய்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக பெரிதாக எந்த தமிழ் படங்களிலும் கிரித்தி ஷெட்டி ஒப்பந்தமாகவில்லை.

ஆனால் இவர் தொடர்ந்து புது புது கதைகளை கேட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. நிலையில் அண்மையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கிரித்தி ஷெட்டி கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நடிகைகளின் பணிநேர பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் – கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

நடிகைகளின் பணிநேர பிரச்சனைகள் குறித்து தனது கருத்தை பகிர்ந்த கிரித்தி ஷெட்டி:

அந்த நிகழ்ச்சியில் பேசிய கிரித்தி ஷெட்டி, “நடிகைகள் ஒவ்வொருவருக்கும் தனி தனி விருப்பங்கள் மற்றும் கருத்துக்கள் இருக்கும். அவர் அவரின் உடல்நிலை மற்றும் சூழ்நிலைகளும் மாறுபடும். எனவே மற்றவர்களின் கருத்துக்கள் குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. என்னை பொறுத்தவரையில் நான் 8 மணிநேரத்துக்கும் மேல் பணியாற்ற தயாராகி இருக்கிறேன்.

இதையும் படிங்க: சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் – வைரலாகும் அப்டேட்

இளமையும், உற்சாகமும் இருக்கும் காலத்தில் கூடுதல் நேரம் உழைப்பதில் எந்த தவறும் இல்லை. அதே சமயத்தில் நடிகைகளில் உடல்நலத்தையும், தனிப்பட்ட தேவைகளையும் படக்குழுவினர் கருத்தில்கொள்வதும் மிக அவசியம்” என அதில் அவர் விளக்கமாக பேசியிருந்தார்.

நடிகை கிரித்தி ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை கிரித்தி ஷெட்டி நடிப்பில் தொடர்ந்து மூன்று படங்கள் இந்த ஆண்டிலே வெளியாக தயாராகிவந்தது. அதில் வா வாத்தியார் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், ரவி மோகனுடன் இணைந்து நடித்துள்ளார் ஜீனி என்ற படமானது இன்னும் வெளியிடப்படவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருந்துவருகிறது. இதில் ரவி மோகன், கிரித்தி ஷெட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us