AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அப்போ அரசன் படம் தீபாவளி ரிலீஸ் இல்லையா? வைரலாகும் புது தகவல்

Arasan movie is now expected to move to next year | நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அப்போ அரசன் படம் தீபாவளி ரிலீஸ் இல்லையா? வைரலாகும் புது தகவல்
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Aug 2026 19:17 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் தமிழ் சினிமாவில் கைக் குழந்தையாக இருக்கும் போதே எண்ட்ரி கொடுத்துவிட்டார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக மக்களின் மனதில் இடம் பிடித்த சிலம்பரசன் நாயகனாக அறிமுகம் ஆகியும் மக்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றார். மேலும் இவர் நாயகனாக அறிமுகம் ஆன பிறகு சிலம்பரசனுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் அமைத்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகமவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டது.

அப்போ அரசன் படம் தீபாவளி ரிலீஸ் இல்லையா?

தொடர்ந்து இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 சதவீதம் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது படம் குறித்து சினிமா வட்டாரங்களில் புது தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. சிலம்பரசனின் ‘அரசன்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாவதற்கான வாய்ப்பு குறைவு.

இப்படம் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர், ஆனால் படப்பிடிப்பு இன்னும் முழுமையடையவில்லை. இதன் விளைவாக, ‘அரசன்’ திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக் காலத்தில் திரையரங்குகளுக்கு வர அதிக வாய்ப்புள்ளது என்று தகவல் வைரலாகி வருகின்றது.

Also Read… தென்னிந்திய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் வரிசைக் கட்டும் படங்கள் – லிஸ்ட் இதோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… லவ் ஓ லவ்… இந்த படத்தில் காதல் எங்க இருக்குனு நிஜமாவே தெரியல!

Follow Us