AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தென்னிந்திய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் வரிசைக் கட்டும் படங்கள் – லிஸ்ட் இதோ

Highly anticipated South Indian language films in August | தென்னிந்திய மொழிகளில் இந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் என்ன என்ன என்பது குறித்த பட்டியலை தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தென்னிந்திய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் வரிசைக் கட்டும் படங்கள் – லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Aug 2026 19:29 PM IST

தென்னிந்திய மொழிகளில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல சிறந்த படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. தொடர்ந்து பல முன்னணி நாயகன்களில் படங்கள் தென்னிந்திய சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் பெரிய நாயகன்கள் சிலரின் படங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகி படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் ரசிகர்களிடையே தோல்வியையும் சந்தித்து உள்ளது. சமீப காலமாக அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வளர்ந்து வரும் நாயகன்களின் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து பல அறிமுக இயக்குநர்களின் படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 7 மாதங்கள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து பலப் படங்கள் வெளியான நிலையில் அடுத்ததாக தற்போது ஆகஸ்ட் மாதம் இன்று தொடங்கி உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் தென்னிந்திய மொழிகளில் பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதில் முக்கியமான படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

தென்னிந்திய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் வரிசைக் கட்டும் படங்கள்:

ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாகும் படங்கள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆகும் டிசி படம். இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் மாதவன் நாயகனாக நடித்த ஜிடி நாய்டு என்ற படம். இதனை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கி உள்ளார்.

ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் படங்கள்: நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம். நடிகர் விஷால் எழுதி இயக்கி நாயகனாக நடித்த மகுடம் படம். மற்றும் இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கி நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த ஹாய் ஆகிய மூன்று படங்கள் வெளியாகிறது.

Also Read… சார்பாட்ட 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் – நடிகை துஷாரா விஜயன் கொடுத்த அப்டேட்

ஆகஸ்ட் 20,21,26-ம் தேதி வெளியாகும் படங்கள்: அதன்படி ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி 2026-ம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவான ஐ அம் கேம் படம் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர் நானி நாயகனாக நடித்து இயக்குநர் ஒடேலா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள தி பாரடைஸ் படம் வருகின்ற 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகிறது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து பல மாதங்களாக தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் யாஷின் டாக்ஸிக் படம் வருகின்ற 26-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… சூப்பர் ஸ்டார் கொடுத்த ஆன்மிக புத்தகம்.. நெகிழ்ச்சியாக வீடியோவை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா!

Follow Us