ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் என்ட்ரி கொடுக்கும் புது நடிகை?.. அட இந்த கதாபாத்திரமா?
Heart Beat Season 3: தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வெப் தொடர்களில் ஒன்றாக இருந்துவருவதுதான் ஹார்ட் பீட் வெப் தொடர். இந்த வெப் தொடரின் சீசன் 3ல் இருந்து பல நடிகைகள் வெளியேறிய நிலையில், தற்போது புது நடிகை ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை மற்றும் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் ஓடிடி வலைத்தளத்தில் வெப் தொடர்கள் மற்றும் சீரியல்கள் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இந்த வரிசையில் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வெப் தொடர்களில் ஒன்றாக இருந்து வந்ததுதான் ஹார்ட் பீட் (Heart Beat Web Series). இந்த வெப் தொடரை இயக்குநர் தீபக் சுந்தரராஜன் (Deepak Sundarrajan) எழுத்த அவருடன் அப்துல் கப்பீஸ், சிதம்பரம் மற்றும் மணிவண்ணன் போன்றவர்கள் இணைந்து இயக்கியுள்ளார். இந்த வெப் தொடரானது இதுவரை மொத்தம் இரு சீசன்கள் வெளியாகியுள்ள நிலையில், மூன்றாவது சீசன் (Heart Beat 3 Web Series) கடந்த ஜூலை 30ம் தேதியில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
இந்த வெப் தொடரிலிருந்து ஏற்கனவே சில நடிகர்கள் விலகிவிட்டார். தற்போது இந்த ஹார்ட் பீட் வெப் சீரிஸில் புது நடிகை ஒருவர் இணைந்துள்ளாராம். அது எந்த நடிகை என அறிவிக்கப்பட்டுள்ளது. அது யார் என பார்க்கலாம்.




இதையும் படிங்க: தனுஷ் உடன் அடுத்து கூட்டணி சேர்வது எப்போது? வெங்கி அட்லூரி ஓபன் டாக்
ஹார்ட் பீட் வெப் தொடரில் இணைந்த பிரபல நடிகை:
ஹார்ட் பீட் வெப் தொடரில் ரீனாவாக நடிகை தீபா பாலு, அவருடன் நடிகை அனுமோல், யோகலட்சுமி, கனிஷா விஜயகுமார், பேபி சபா, கார்த்திக் குமார் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த வெப் தொடரிலிருந்து ஏற்கனவே நடிகை தீபா பாபு மற்றும் நடிகை யோகலட்சுமி போன்ற பிரபலங்கள் விலகிவிட்டனர்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு குற்ற கதையில்… போலீஸாக சசிகுமார்.. வெளியானது வதந்தி 2 வெப் சீரிஸின் ட்ரெய்லர்!
அந்த வகையில் தற்போது புதிதாக நடிகை ஒருவர் முக்கியமான வேடத்தில் இணைந்துள்ளாராம். இந்த வெப் தொடரில் நடிகை காயத்ரி சங்கர் அணு என்ற வேடத்தில் இணைந்துள்ளாராம். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஹார்ட் பீட் சீசன் 3 வெப் தொடரில் இணைந்த நடிகை காயத்ரி சங்கர் குறித்த அறிவிப்பு:
Welcoming Gayathrie to the world of HeartBeat ❤️
Hotstar Specials #HeartBeatSeason3 now streaming only on #JioHotstar #HBS3 #HBS3OnJHS #HeartBeatS3OnJioHotstar #HeartBeat3OnJioHotstar #HeartBeatS3NowStreaming #JioHotstarTamil #DeepakSundarrajan @Deepabalu_ @Anumolofficial… pic.twitter.com/cnKrfOJKYR
— JioHotstar Tamil (@JioHotstartam) July 30, 2026
ஹார்ட் பீட் சீசன் 3 வெப் சீரிஸானது கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த வெப் தொடராது சிறப்பாக உருவாகியிருக்கும் நிலையில், ஓடிடியில் வெளியாகிவருகிறது. தற்போது இந்த வெப் தொடரில் ஏற்கனவே பல புது நடிகர்கள் இணைந்திருக்கும் நிலையில், நடிகை காயத்ரி சங்கரும் இணைந்துள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகிவருகிறது.