AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vadhandhi 2: மீண்டும் ஒரு குற்ற கதையில்… போலீஸாக சசிகுமார்.. வெளியானது வதந்தி 2 வெப் சீரிஸின் ட்ரெய்லர்!

Vadhandhi 2 Trailer: தமிழ் சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடித்துவருபவர் சசிகுமார். இவர் தற்போது நடித்துவரும் ஓடிடி வெப் சீரிஸ்தான் வதந்தி 2. இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக தயாராகிவரும் நிலையில், இதன் ட்ரெய்லரை ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த ட்ரெயிலர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Vadhandhi 2: மீண்டும் ஒரு குற்ற கதையில்… போலீஸாக சசிகுமார்.. வெளியானது வதந்தி 2 வெப் சீரிஸின் ட்ரெய்லர்!
வதந்தி 2 வெப் சீரிஸின் ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 31 Jul 2026 13:02 PM IST

இயக்குநராகவும், நடிகராகவும் பிரபலமானவர் சசிகுமார் (Sasikumar). இவர் இறுதியாக தமிழில் நடித்திருந்த திரைப்படம்தான் மை லார்ட் (My Lord). இந்த திரைப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் (Raju Murugan) நிலையில், கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சைத்ரா ஆச்சார் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் கிட்டத்தட்ட இரு படங்களில் நாயகனாக நடித்துவந்தார். அந்த வகையில் இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் (Andrew Louis) இயக்கத்தில், சசிகுமார் நடித்துவந்த வெப் சீரிஸ்தான் வதந்தி சீசன் 2 (Vadhandhi season 2). இதில் சசிகுமார் போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருடன் யஷ்வந்த், அனகா, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த வெப் தொடரானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 07ம் தேதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அந்த வகையில், அதை முன்னிட்டு இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சூதாட்டம் கதைக்களத்தில்.. வெளியானது துல்கர் சல்மானின் ‘ஐஅம் கேம்’ பட ட்ரெய்லர்!

வதந்தி சீசன் 2 வெப் சீரிஸின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த வதந்தி 2 வெப் சீரிஸில் நடிகர் சசிகுமார் புலனாய்வு போலீசாக நடித்துள்ளார். இந்த தொடரில் ஒரு காதல் காதல் மற்றும் அதனால் நடக்கும் கொலைகள் குறித்த கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் யஷ்வந்த் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் நடிகை அனகா உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: தேவி சீதையாக சாய் பல்லவி.. ராமாயணா படத்தில் அவர் பெற்ற சம்பளம் இத்தனை கோடியா?

வதந்தி சீசன் 1 தொடரை போலவே இந்த வதந்தி 2 வெப் சீரிஸும் ஒரு கொலை வலக்கை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான கதைக்களத்தில், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இந்த வெப் தொடரின் ட்ரெய்லர் அமைந்துள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

வதந்தி சீசன் 2 வெப் சீரிஸின் ட்ரெய்லர் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

வதந்தி 2 வெப் தொடரை இயக்குநரும், தயாரிப்பாளருமான புஷ்கர் காயத்ரி இணைந்து, அமேசான் பிரைம் ஒடிடியுடன் தயாரித்துள்ளனர். இந்த வெப் தொடரானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், ஆகஸ்ட் 07ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us